சுந்தர் சி, வெங்கட் பிரபு…! வச்சு செய்யும் சிம்பு!

‘முட்டை போட்ற கோழிக்கே ஆம்லெட் ஊட்டிவிடணும்’ என்ற முடிவுக்கு வந்துவிட்டார் சிம்பு. சுற்றமும் நட்பும் தவிர தன்னை, ஊரே சேர்ந்து உப்புமாவாக கிண்டிய நாட்கள் அவரது நினைவில் வந்து போனதன் விளைவு… அடக்க ஒடுக்கமாக நடித்துக் கொடுக்க வேண்டும். மளமளவென வருடத்திற்கு நாலு படங்களாகவது ரிலீஸ் செய்துவிட வேண்டும் என்று முடிவெடுத்திருக்கிறாராம்.

வெங்கட் பிரபு இயக்கத்தில் சுரேஷ் காமாட்சி தயாரிக்கும் ஒரு படத்தில் நடிப்பதாக அறிவித்தார் அல்லவா? ‘மாநாடு’ என்று பெயர் வைக்கப்பட்டிருக்கும் அப்படத்தின் படப்பிடிப்பு வெகு விரைவில் துவங்கவிருக்கிறது. அதற்குள் சுந்தர்சி யும் சிம்புவை வைத்து இன்னொரு படத்தை இயக்கப் போகிறார். இப்படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்கப் போகிறது.

ஒரு செடிக்கு தண்ணீர் ஊற்றவே உடம்பெல்லாம் வியர்க்கும் சிம்பு, எதற்காக ரெண்டு செடியை சுற்றி வேலி போட்டார்? அதான் சொன்னோமே… நம்மை விமர்சித்த இதே சினிமாக்காரர்களை வச்சு செய்ய வேண்டும் என்று நினைத்ததால்தான்.

சுந்தர்சி இயக்கவிருக்கும் இந்தப்படம் தெலுங்கில் வெளிவந்து சூப்பர் ஹிட்டடித்த பவன் கல்யாண் படத்தின் ரீமேக். இரண்டு படங்களுக்கும் மாறி மாறி கால்ஷீட் கொடுத்து இன்டஸ்ட்ரியை கதற விடும் எண்ணத்திலிருக்கிறார் சிம்பு.

மல்லாக்கொட்டைன்னு நினைச்சவங்களுக்கு, இல்லயில்ல. நான் மலைக்கோட்டைன்னு காட்டுவாரோ?

Read previous post:
கேரளாவில் வெள்ளம்! முதல் ஆளாக உதவிக்கரம் நீட்டிய சூர்யா

Close