ஜனவரியில் தொடங்குகிறது மாநாடு! அரசியலை ஒரு கை பார்ப்பாரா சிம்பு?
இந்தியன் 2 ல் சிம்புவை நடிக்க வைக்கும் முயற்சி ஒருபுறம் நடந்து கொண்டிருக்கிறது. இதில் முழுக்க முழுக்க ஈடு பட்டிருப்பவர் எஸ்.டி.ஆரின் தோஸ்த் அனிருத்! (அந்த ஆபாச பாட்டு விஷயத்துல சிம்புவுக்கு நெருக்கடி கொடுத்ததற்கு இப்பவாவது பரிகாரம் தேடுறாரே, அந்த வகையில் ஹேப்பி)
‘மாநாடு என்னாச்சு… சிம்பு உங்ககிட்டதான் கேட்குறோம்?’ என்று ரசிகர்கள் லேட்டஸ்ட்டாக அறிவிக்கப்பட்ட படத்தை ஞாபகப்படுத்திக் கொண்டே இருந்தார்கள். ஒரு புறம் திரைக்கதை எழுதுவதில் மும்முரமாக இருந்த வெங்கட்பிரபு கதையை முடித்து அதை சிம்புவிடம் சொல்லவும் தயாராகிவிட்டார். அப்புறம் என்ன? பச்சைக் கொடிக்கு வேலை வந்தாச்சு.
‘மாநாடு’ என்று பெயர் வைத்துவிட்டு அரசியல் பற்றி பேசாமலிருக்க முடியுமா? நடப்பு விஷயங்களை போட்டு பிளந்து கட்ட முடிவெடுத்திருக்கிறாராம் சிம்பு. சர்கார் சர்ச்சையே இன்னும் முடியல. அதற்குள் மினிஸ்டர்களின் வெள்ளை வேட்டியில் க்ரீஸ் தடவ கிளம்பிவிட்டாரா சிம்பு? அதிருக்கட்டும்…
ஜனவரியில் துவங்கி ஒரே ஷெட்யூலில் படத்தை முடிக்க திட்டமிட்டிருக்கிறார் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி. தீவிரமாக கதாநாயகி வேட்டை ஆடிக் கொண்டிருக்கிறார்கள். யாரு வேணா இருக்கட்டும்… அந்த கீர்த்தி சுரேஷ் வேணாம் என்று சிம்பு ரசிகர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தாத குறையாக கெஞ்சுகிறார்கள்.
சிம்புவை மயக்குகிற சில்க் ஐஸ் யாருக்கு இருக்கோ, வரிசையில் வாங்கம்மா!