நூலிழையில் தப்பிய சிம்பு! கொஞ்சம் சுதாரிக்காவிட்டால் இந்நேரம்?

ஒருவனுக்கு ஏழாம் அறிவு வேலை செய்யாவிட்டால், காலில் குத்த வேண்டிய முள் தலையில் கூட குத்தி வைக்கும். முன்பே யூகித்து முன்னறிவுடன் நடந்தால் முள் என்ன? முனியாண்டிவிலாஸ் எலும்பு குத்தினால் கூட அசால்ட்டாக எடுத்துப் போட்டுவிட்டு நடையை கட்டிவிடலாம். அப்படிதான் வாய்க்குள் சிக்கிய மீன் முள்ளை எடுத்து எதிராளிகளின் கண்ணில் குத்திவிட்டு தப்பியிருக்கிறார் சிம்பு.

கடந்த சில தினங்களுக்கு முன் சிம்புவை தாக்க குண்டர்கள் அனுப்பி வைக்கப்பட்டார்கள் என்றொரு செய்தியை வெளியிட்டிருந்தோம். ஏன் அந்த குண்டர்கள் அங்கு வந்தார்கள்? அவர்களுக்கும் சிம்புவுக்கும் கால்ஷீட் மட்டும்தான் பிரச்சனையா? விசாரித்தால் பலே பலே தகவல்கள் கொட்டுகின்றன.

கூவத்தூரில் அதிமுக எம்.எம்.ஏக்கள் அடைக்கப்பட்டிருந்தார்கள் அல்லவா? அதே நாள்தான் அங்கு வந்தாராம் அந்த தயாரிப்பாளர். ஷுட்டிங் போகலாம் வாங்க என்று அழைக்க, சிம்புவும் தயாராகி வாசலுக்கு வந்திருக்கிறார். பார்த்தால், சின்னம்மா சசிக்கலா படம் ஒட்டிய பத்து வாகனங்கள் அணிவகுத்து நிற்க, சிம்புவை அழைத்துச்செல்ல சொகுசு கார் ஒன்றும் தயாராக நின்றதாம். லேசாக சுதாரித்துக் கொண்ட சிம்பு, ஆமா… ஷுட்டிங் எங்கே என்று கேட்டிருக்கிறார். ஈசிஆர்ல என்று பதிலளித்தாராம் தயாரிப்பாளர்.

அன்றுதான் கூவத்தூர் முகாமுக்கு வந்திருந்தார் சசிகலா. நம்மை அங்கு கொண்டு போய் சசிகலா முன்பு நிறுத்ததான் திட்டம் போடுகிறார்கள். லாரன்ஸ் ஓ.பி.எஸ்சுக்கு ஆதரவளித்ததாக டி.வி செய்திகள் ஓடிக் கொண்டிருக்க, நீங்க லாரன்சுன்னா நாங்க சிம்புடா என்று போட்டுக் கொடுக்கதான் இந்த திட்டம் என்பதை பளிச்சென்று புரிந்து கொண்டது சிம்புவின் ஏழாம் அறிவு.

அப்புறமென்ன? நான் ஷுட்டிங் வரமாட்டேன் என்று இவர் அடம் பிடிக்க, தயாரிப்பாளர் வற்புறுத்த… அன்றிரவே குண்டர்கள் ஏவி விடப்பட்டார்களாம் சிம்பு வீட்டிற்கு.

ஒரு நிமிஷம் சிம்பு சுதாரிக்கலேன்னா… சசிகலாவிடம் சிம்பு ஆசிபெற்றார் என்று செய்திகள் வந்திருக்கும். பின்னணி தெரியாமல் சிம்புவை குதறியிருக்கும் மீடியா!

யப்பா… உங்க அரசியல் பெரிய அரசியலா இருக்கேப்பா…!

https://youtu.be/fLIJ1LTlyJg

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
மிரட்டலுக்கு நடுவே தயாரான டைரக்டர் அமீர் படம்! இரண்டு மாசம் ஷுட்டிங் எடுக்காமலே தெருவில் சுற்றிய டீம்!

Close