ஒரே ஒரு போன் கால்தான்! ஓடிவந்தார் சிம்பு! பரவசப்படும் ‘தொட்ரா ’ ஹீரோ!

ராம்கோபால் வர்மா மாதிரியான கரண்ட் பாய்ச்சும் ஆசாமிகள் வைத்திருந்த தலைப்பை அர்த்த ராத்திரியில் ‘லபக்கி’க் கொண்டு வந்த மாதிரிதான் இருக்கிறது ‘தொட்ரா’ என்கிற தலைப்பு. ஆனால் ஆக்ஷனுக்கோ, அடிதடிக்கோ சம்பந்தமேயில்லாத சைவப்பூனை பாக்யராஜின் சிஷ்யரான மதுராஜ்தான் இப்படியொரு தலைப்பை வைத்திருக்கிறார் தன் படத்திற்கு.

பிரபல நடிகர் பாண்டியராஜனின் மகன் ப்ருத்விராஜ் ஹீரோவாக நடிக்க அவருக்கு ஜோடியாக நடித்திருக்கிறார் வீணா. உத்தமராஜா இசையமைத்திருக்கிறார்.

படத்தில் ஒரு பாடலை சிம்பு பாடினால் சிறப்பாக இருக்குமே என்று நினைத்தாராம். ஆனால் இவருக்கோ, தயாரிப்பாளர் ஜெயச்சந்திராவுக்கோ, இசையமைப்பாளர் உத்தமராஜாவுக்கோ சிம்பு பரிச்சயமே இல்லை. அப்புறம் எப்படி? அந்த பொறுப்பை ப்ருத்விராஜ் எடுத்துக் கொண்டார்.

ஒரே ஒரு செல்போன் மெசேஜ் அனுப்பினாராம் சிம்புவுக்கு. உடனடியாக ரிப்ளை பண்ணிய சிம்பு, ட்ராக் அனுப்புங்க. கேட்டுட்டு சொல்றேன் எனக் கூறியிருக்கிறார். அதற்கப்புறம் அதுவும் அனுப்பப்பட…. ஓ.கே. வர்றேன் என்றவர் பொறுப்பாக வந்து நெருப்பாக பாடிக் கொடுத்துவிட்டு சென்றாராம். அவ்ளோ பெரிய நடிகர், பாடகர், நான் ஒரு இடத்தில் இப்படி வந்தா நல்லாயிருக்கும்னு சொன்னதை பெருந்தன்மையோடு ஏற்றுக் கொண்டு பாடிக் கொடுத்தார். என் மனசுல ஒரே நிமிஷத்தில் உயர்ந்துவிட்டார் சிம்பு என்கிறார் உத்தமராஜா.

உங்க அப்பாவை எனக்கு ரொம்ப பிடிக்கும். அதனால்தான் மறுப்பே சொல்லல என்று ப்ருத்விராஜிடம் சொல்லிவிட்டு போனாராம் சிம்பு.

ஒரு பாட்டுக்கு பின்னாடி எவ்வளவு கதை இருக்குப்பா?

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
Naragasooran – Official Teaser

https://www.youtube.com/watch?v=hQkQlRYqvtg

Close