விஜய் பதிலுக்காக வெயிட்டிங்! காத்திருக்கும் சிவாஜி பேமிலி!

அன்னை இல்லத்து பிரியாணிக்கு அநியாய ருசி. இன்டஸ்ட்ரியே இந்த பிரியாணிக்கு ஆசைப்படும்! அப்படியொரு விசேஷ பிரியாணி டேபிளில்தான் விஜய்யும் செல்வராகவனும் சந்தித்துக் கொண்டார்கள். நடிகர் திலகத்தின் அன்னை இல்லத்தில் நடந்த அந்த சந்திப்பு, சிவாஜி பேமிலிக்கு பல கோடிகளை ஈட்டித் தரப்போகும் சந்திப்பாக இருக்க வேண்டும் என்பதுதான் பலரது விருப்பமும்.

அன்று கதை கேட்ட விஜய், செல்வராகவனின் இயக்கத்தில் நடிக்கவும் பிரியப்பட்டு விட்டார். ஆனால் அதை பிரபு பேமிலிக்கு முறைப்படி தெரிவிக்க வேண்டும் அல்லவா? இன்னும் அவர் தரப்பிலிருந்து க்ரீன் சிக்னல்  வந்து சேரவில்லையாம். இது தொடர்பாக நியூ தமிழ்சினிமா.காம் பிரபுவுடமே கேட்டது. “சார்… செல்வராகவனும் விஜய்யும் சந்திச்சாங்க. விஜய் கதையும் கேட்டு அதில் நடிக்க சம்மதித்தாகவும் தகவல் வந்தது. துவக்க விழா எப்போன்னு சொன்னீங்கன்னா, விஜய் ரசிகர்களுக்கு சந்தோஷமா இருக்குமே?” இதுதான் கேள்வி.

“இன்னும் விஜய் சார் தேதி கொடுக்கல. கொடுத்ததும் கண்டிப்பா மீடியாவுக்கு முறைப்படி அறிவிப்போம். நாங்களும் அவர் பதிலுக்காகதான் ஆவலா காத்திருக்கோம்” என்றார் பிரபு.

இதற்கிடையில் செல்வராகவன்- விஜய் இணையும் படத்தின் மீது தனுஷின் தயாரிப்பு நிறுவனமும் ஒரு கண் வைத்திருப்பதாக ஒரு தகவல் நடமாடுவதுதான் அதிரடி டர்னிங்!

To Listen Audio Click Below:-

 

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
Kadavul Irukan Kumaru – Stills Gallery

Close