சென்சார் இல்லாத சின்னத்திரையில் ஆபாச ஆட்டம் போடும் இயக்குனர்!
‘காதலில் சொதப்புவது எப்படி’ என்ற படத்தின் மூலம் ரசிகர்களால், ‘வாங்கய்யா வாத்தியாரய்யா…’ என்று வாயார வரவேற்கப்பட்ட டைரக்டர் பாலாஜி மோகன், அதற்கப்புறம் எடுத்த படங்கள் எல்லாம் ‘போங்கய்யா… அப்படியே போயிடுங்கய்யா’ டைப்பாகவே அமைந்ததுதான் கொடுமை. (மாரி மட்டும் எஸ்கேப்)
அதற்கப்புறம் தமிழ்சினிமாவில் தலைகீழாக நின்று பார்த்த பாலாஜி மோகனுக்கு ஒரு தயாரிப்பாளரும் கை கொடுக்கவில்லை. இந்த நிலையில்தான் கார்த்திக் சுப்புராஜ் ஆதரவுடன் சின்னத்திரையில் சீரிஸ் இயக்குனர் ஆகியிருக்கிறார். ஹாட் ஸ்டாரில் இவர் இயக்கிய as-im-suffering-from-kadhal என்ற தொடர் பரவலாக பேசப்பட்டு வருகிறது. இதில்தான் பாலாஜியின் பக்குவம்(?) படு கேவலமாக வெளிப்பட்டு வருகிறது.
குடும்பங்களில் கூட்டம் கூட்டமாக உட்கார்ந்து பார்க்கும் இந்த தொடரில் பேசப்படும் வசனங்கள், அவ்வளவு ஆபாசம்! அவையெல்லாம் ஆங்கில வசனங்களாக கடந்தாலும், நன்கு படித்த இளசுகள் பார்க்கிற சீரியலில் இப்படியெல்லாம் பேச வேண்டுமா என்று கவலை கொள்கிறார்கள் பெருசுகள். இதை கூட மன்னித்துவிடலாம்.
தமிழர்களை பிச்சைக்காரர்கள் என்று கேவலமாக பேசிய கன்னட நடிகை தன்யா பாலகிருஷ்ணாவைதான் இதில் ஹீரோயினாக நடிக்க வைத்திருக்கிறார் பாலாஜி மோகன்.
சின்னத்திரைக்கு சென்சார் இல்லையென்றால், பாலாஜி மோகன்களால் பல குடும்பங்கள் பாழாவது உறுதி!