ஸ்ரீரெட்டி லாரன்ஸ் திடீர் சமாதானம்?
நடிகை ஸ்ரீரெட்டி வீசிய கால் சிலம்புகளில் ஒன்று, லாரன்ஸ் தலையில் விழுந்து அவரது நெற்றியை பெயர்த்த கதையை நாடே அறியும். அவருக்கு மட்டுமா சோதனை? சட்டை முன் பக்கத்தில் பட்டன் வைத்த அத்தனை சினிமாக் காரர்களும் ஐயோ என்று நெஞ்சை பிடித்துக் கொண்டார்கள்.
தினந்தோறும் ஒரு திடுக் திடுக் என்று அக்காவின் அட்ராசிடி ஆந்திரா, தமிழ்நாடு என்று இரு ஸ்டேட்டையும் உலுக்கிக் கொண்டிருந்தது. அவர் மிரட்டி பணம் கேட்கிறார் என்று கூடவே இன்னொரு புகாரும் சேர்ந்து கொள்ள, ஸ்ரீரெட்டியின் சென்னை விசிட் இன்னும் பரபரப்பை கூட்டியது.
அவரது பரபரப்பெல்லாம் பேஸ்புக் பதிவோடு சரி. அதற்கு மேல் தாண்டிப்போய் வழக்கு மன்றத்துக்கு போகிற எண்ணமெல்லாம் இல்லவே இல்லை. சரி ஸ்ரீரெட்டிதான் போகவில்லை. அவரால் பாதிக்கப்பட்ட ஆண் மகன்கள் போக வேண்டியதுதானே?
அங்குதான் ஸ்டைலை மாற்றி ஸ்டெப் வைக்கிறார் லாரன்ஸ். அவர் தற்போது நடித்துக் கொண்டிருக்கும் ஒரு படத்தில் ஸ்ரீரெட்டிக்கு வெயிட்டான ரோல் வழங்கப்பட்டுள்ளது. இப்போதெல்லாம் ஆன் ஸ்கிரீனில் மட்டுமல்ல, ஆஃப் ஸ்கிரீனிலும் ‘லாரன்சா, தெய்வமாச்சே?’ என்கிறாராம் ஸ்ரீரெட்டி!
கடைசியில் பிஸ்கட்டை நீ தின்னுட்டு, பேப்பரை எங்க வாயில ஊட்டிட்டியேம்மா?