ஜல்லிக்கட்டுக்கு ஸ்டிரிக்ட் ரூல்ஸ் கொண்டுவாங்க! ரஜினி ஐடியா!

எப்பவும் ரயில் பிளாட்பாரத்தை விட்டு கிளம்பிய பிறகுதான் பச்சைக்கொடி காட்டியது சரியா. சிவப்புக் கொடி காட்டியது சரியா? என்று பேச ஆரம்பிப்பார் ரஜினி. நாட்டு நடப்புகள் அவரை அவ்….வ்வளவு வேகமாக போய் எட்டியிருக்கிறது என்று எடுத்துக் கொள்ள பழகிவிட்டது ஊர். இருந்தாலும், ஜல்லிக்கட்டு விஷயத்தில் நாடே கொந்தளிச்சுப் போய் கிடக்கு. கமல்ஹாசனே தன் குழப்ப வாயால் குமுற குமுற ஒரு கருத்தை கூறிவிட்டார். அதற்கப்புறமும் ரஜினியை காணலையே என்று கவலைப்பட்ட பொதுஜனத்திற்கு ஒருவழியாக அவரது கருத்து தெரிய வந்தது.

ஆனந்த விகடன் பத்திரிகை நடத்திய விழாவில் கலந்து கொண்டார் ரஜினி. அவருடன் கமல், மற்றும் வைரமுத்து ஆகியோரும் அங்கிருக்க தன் கருத்தை அழுத்தமாகவே பதிவு செய்துவிட்டார் ரஜினி.

”விகடன் போன்ற ஒரு விழாவில் தான் பாரம்பரியம், கலாசாரம் பற்றி பேச முடியும். கலாசாரம் என்பது மிகவும் முக்கியம், அதிலும், ஜல்லிக்கட்டு என்பது தமிழர்களின் கலாசாரம். அதை நாம் காப்பாற்ற வேண்டும். அதை நாம் விட்டுக்கொடுக்கக்கூடாது. ஜல்லிக்கட்டுக்கு என ஸ்டிரிக்ட் ரூல்ஸ் கொண்டுவாங்க. யாருக்கும் ரொம்ப காயம் ஏற்படாத மாதிரி ரூல்ஸ் கொண்டுவாங்க. அதுக்கு பதிலா ஒரு கலாசாரத்தை வேண்டாம் என சொல்வது சரியா?” எனக்கூற அரங்கத்தில் எழுந்த கைதட்டல்கள் அடங்க வெகுநேரம் ஆனது.

ரஜினி என்ன சொன்னாலும் ஆர்ப்பரிக்க தமிழகம் தயாராக இருக்கும் போது, எதிலும் லேட் அப்ரோச் காட்டுகிறாரே…. அதுதான் ஏனென்றே புரியவில்லை!

https://youtu.be/KLrhZEoAtd4

3 Comments
  1. Mohanan says

    MS baskar looks similar to Kabbali black ticket guy rajini, in fact ms baskar looks better. Rajinigaandu makes theaters to sell tickets at day time robbery price 5000 rupees, rajinipochaan makes money just only for his money. People like you make this a..hole a noble man.

  2. Sunmugam says

    I agree with Mohanan. Rajinikanth is not useful to people of tamilnadu. Extreme selfish money greedy person. Now he will start build up for 2.0, so he will act in public as he is concerned about Tamils, kaasa panamma..this also acting. Ignore this guy.

  3. தமிழ்ச்செல்வன் says

    ல்லிக்கட்டு குறித்து ரஜினி கூறுகையில், “ஜல்லிக்கட்டு தமிழர்களின் கலாச்சாரம், கலாச்சாரத்தில் எப்போதும் கைவைக்கக் கூடாது.

    என்ன கட்டுப்பாடு வேண்டுமானாலும் விதியுங்கள். ஆனால் ஜல்லிக்கட்டு நடத்த தடை விதிக்காதீர்கள்.

    பெரியவர்கள் ஒரு கலாச்சாரத்தை ஏற்படுத்திக் கொடுத்துள்ளார்கள். அதனை நாம் காப்பாற்ற வேண்டும்.

    சில கட்டுப்பாடுகளை விதியுங்கள், ஆனால் ஜல்லிக்கட்டு நடத்தப்பட வேண்டும்,” என்று கூறியுள்ளார்.

    தலைவர் ரஜினி அவர்களின் சார்பாக போராடும் காளையர்களுக்கு வாழ்த்துக்கள்.
    இந்த ஆண்டு சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்களின் ஆசியோடு ஜல்லிக்கட்டு நடைபெறும். முடிந்தால் தடுத்து பாரு டா

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
Trisha Attacked In The Shooting Spot-Jallikattu Issue

https://youtu.be/XssxQlZ5rio

Close