நெஞ்சில் துணிவிருந்தால் தியேட்டரிலிருந்து நாளை வாபஸ்! சுசீந்திரன் அறிவிப்பு சரியா?

நிறையும் குறையுமாக வந்திருக்கும் படம்தான் நெஞ்சில் துணிவிருந்தால். விமர்சகர்களின் குறைகளை கணக்கில் எடுத்துக் கொண்ட அப்படத்தின் இயக்குனர் சுசீந்திரன், குறிப்பிட்ட சில விஷயங்களை ரீ எடிட் செய்து படத்தை மீண்டும் திரையிட்டார். ஆனால் பலன் ஏதுமில்லை. இன்னொரு புறம் மழை, வெள்ளம் போன்ற காரணங்களால் தியேட்டர்களுக்கு ரசிகர்கள் வருவதும் அடை பட்டுவிட… வேறு வழியில்லாத இக்கட்டான நிலை அவருக்கு.

இரண்டாவது வாரம் க்யூபுக்கு பணம் கட்டுவது. தியேட்டர்களுக்கு வாடகை தருவது போன்ற பெரும் சுமையிலிருந்து தப்பிக்க ஒரே வழி தற்போது படத்தை வாபஸ் பெறுவதுதான். சில அரைகுறைகளால் இந்த செயல் விமர்சிக்கப்படலாம். ஆனால் நிஜம் உணர்ந்து செயல்படுவதே புத்திசாலித்தனம் என்பதை நிரூபித்திருக்கும் சுசீந்திரன், இப்படத்தை அடுத்த மாதம் 15 ந் தேதி மீண்டும் வெளியிட திட்டம் வைத்திருக்கிறாராம்.

ஆனால் தமிழ்ராக்கர்ஸ் அரக்கன், திருட்டு விசிடி போன்ற எக்ஸ்ட்ரா அச்சுறுத்தல்கள் இருப்பதை கணக்கிட்டால் சுசீந்திரன் வேறு ஏதாவது செய்தே ஆக வேண்டும்.

நமக்கென்னவோ இன்னும் அரை மணி நேர படத்தை புதிதாக ஷுட் பண்ணி சேர்ப்பார் போல தெரிகிறது. அந்த அரை மணி நேரம் ‘வெயிட்’டாக இருந்தால், துணிச்சலுக்கு மரியாதைதான்!

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
Bold Discussion About Lakshmi Short Film

https://www.youtube.com/watch?v=a3VTv8e99pE&t=69s

Close