புரட்சியை நோக்கி விஷால்! புதிய அத்தியாயத்திற்கு தயாராகும் தமிழ்சினிமா!

பழைய பஞ்சாங்கங்களை கிழித்தெறிந்தால் ஒழிய புதிய வழி பிறக்கப் போவதில்லை! சினிமா என்கிற வியாபாரத்தை தன் இஷ்டத்திற்கு வளைத்து நெளித்து நாசாமாக்கி வரும் சில தனி மனித ஈகோயிஸ்டுகளுக்கு சவுக்கடி கொடுக்க தயாராகி வருகிறதாம் தயாரிப்பாளர் சங்கம். விஷாலின் இந்த முயற்சி மட்டும் உருப்படியாக நடந்தால், அதற்கப்புறம் தமிழ்சினிமாவின் வளர்ச்சியை ஒரு கொம்பனாலும் தடுக்க முடியாது.

ஒரு படம் தியேட்டரில் வெளியாகி, ரசிகர்கள் கோலாகலமாக கட் அவுட் வைத்து, பால் அபிஷேகம் நடத்தி அதை பார்த்து வருவதுதான் நாம் சந்தித்து வரும் பல காலத்து வழக்கம். ஆனால் இந்த சந்தோஷங்களை ஒருபுறம் ஒதுக்கி வைத்துவிட்டு பணம் போட்ட தயாரிப்பாளரின் வாயில் விஷம் ஏறாமல் பார்த்துக் கொள்ள வேண்டியதுதான் மிக மிக முக்கியம்.

ரஜினி, கமல், அஜீத், விஜய் படங்கள் வரைக்கும் இந்த முறையில் நடந்து தொலையட்டும். மற்ற மற்ற நடிகர்களின் படங்களை வெவ்வேறு முறைகளில் வெளியிடுவதுதான் சரியான முடிவாக இருக்கும்.

தியேட்டர் வருமானத்தை விட ஏராளமான வருமானம் வெளியேதான் கொட்டிக்கிடக்கிறது. இன்று விண்ணை தொட்டிருக்கிற விஞ்ஞான யுகத்தில், செல்போனிலேயே எல்லாவற்றையும் முடித்துக் கொள்கிறார்கள். செல்போனிலிருந்து வை-பை மூலம் வீட்டிலிருக்கிற பெரிய டி.வி ஸ்கிரீனில் எல்லாவற்றையும் பார்த்துவிட முடிகிறது. சின்ன சின்ன புரஜக்டர்கள் சகஜமாகி வருகிறது வீடுகளில். டிடிஎச் சேவை திரும்பிய இடத்திலெல்லாம் கொட்டிக் கிடக்கிறது. அமேசான் போன்ற இணைய தளங்கள் படங்களை பெரும் விலை கொடுத்து வாங்க ஆரம்பித்துவிட்டார்கள்.

ஒவ்வொரு மாவட்டத்திலும் 100 கணக்கான பிரைவேட் சேனல்கள் ஒளிபரப்பாகின்றன. இந்த எல்லா வழிகளையும் திறந்து வைத்து அதன் மூலம் படங்களை வெளியிடுவது என்கிற திட்டம்தான் விஷாலின் புதிய திட்டமாம். தியேட்டரிலிருந்து வருகிற வருமானத்தை விட பல மடங்கு வருமானத்தை கொட்டும் இந்த திட்டத்திற்கு தியேட்டர் அதிபர்கள் ஒருபோதும் ஆதரவு தெரிவிக்கப் போவதில்லை. கமல் விஸ்வரூபம் சமயத்தில் அனுபவித்த தொல்லைகளை ஏற்படுத்துவார்கள். ரெட் என்று அச்சுறுத்துவார்கள். ஆனால் அதையெல்லாம் ஒரு பொருட்டாகவே கருதாமல் இந்த திட்டத்தை செயல்படுத்தினால், தயாரிப்பாளர் போட்ட பணத்திற்கு 100 சதவீத கியாரண்டி வந்துவிடும்.

இதுதான் விஷாலின் திட்டமாம்.

வேண்டுமானால் ஒரு வாரம் கழித்து தியேட்டர்கள் அதே படத்தை வெளியிட்டுவிட்டு போகட்டுமே என்கிறாராம் அவர். இப்படி ‘ஓடம் ஒரு நாள் வண்டியில் ஏறும் காலம்’ வந்தாலொழிய இந்த தமிழ்சினிமாவுலகத்தை காப்பாற்ற முடியாது.

பின்குறிப்பு- டிடிஎச் ஒளிபரப்பு குறித்து ஒருபக்கம் விஷால் தீவிரமாக ஆலோசித்து வந்தாலும், இப்போதைக்கு அந்த எண்ணம் இல்லை என்று அவர் குறிப்பிட்டிருப்பதையும் கவனிக்க வேண்டும். எதையும் வெளிப்படையாக விவாதித்துக் கொண்டிருந்தால், அதற்கும் எந்த விதத்திலாவது குழி பறிப்பார்கள் என்ற அச்சம் காரணமாக அப்படி சொல்லியிருப்பாரோ?

1 Comment
  1. Rajii says

    Theatre owners are united unlike producers, when vishal announced the stike producers like dhananjagen dhannu siva …. that members of thamil thirapada varthaka sabai went to other side and opposed. This time also when the strike announced on friday dhannu and some producers was with them.
    EGO clash /also if I can’t do, will not allow you to do.
    Nothing much he can do. Ways of implementing tec is the best way.

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
Natpuna Ennanu Theriyuma – Official Teaser 2

https://www.youtube.com/watch?v=fQhwxLcVa0w

Close