வாழ்க தமிழ்ராக்கர்ஸ்! அழிஞ்சுது சினிமா?

ஏழை நடுத்தர மக்களின் எட்டாக்கனியாகிவிட்டது சினிமா. இருக்கிற கொடுமை போதாதென்று இன்னும் இன்னும் என்று டிக்கெட் விலையை உயர்த்திக் கேட்ட சினிமா சங்கங்களுக்கு தன் கடைக் கண் பார்வையை அருளிவிட்டது தமிழக அரசு. நேற்று அரசு வெளியிட்ட டிக்கெட் கட்டண அனுமதி, சினிமா மண்ணாய் போவதற்கான அத்தனை வழிகளையும் திறந்துவிட்டிருக்கிறது. பார்க்கிங் கொள்ளை, பாப்கார்ன் கொள்ளை, கூல் ட்ரிங்க்ஸ் கொள்ளை என்று இஷ்டத்துக்கு விளையாடும் மால்கள், இனி டிக்கெட் விலையை ஏற்றினாலும் மக்கள் பொறுத்துக் கொள்வார்களா? தெரியாது.

ஆனால் இதே மல்டிபிளக்ஸ் கூட்டம் இந்த அட்ராசிடி காரணமாக திருட்டு விசிடி புகழ் தமிழ்ராக்கர்சுக்கு கோவில் கட்டி கும்பிட ஆரம்பித்துவிடும் என்பதுதான் நிஜம். இது ஒருபுறமிருக்க… கேளிக்கை வரியை ரத்து செய்யும் வரை புதுப்பட ரிலீஸ் இல்லை என்று அறிவித்திருக்கும் விஷாலை கண்டு கொள்ளவே இல்லை அரசு. மாறாக தியேட்டர்காரர்களின் வெகுகாலத்து கோரிக்கைக்கு மட்டும் செவி சாய்த்துவிட்டது. இப்போது விஷால் என்ன செய்யப் போகிறாரோ? அது அவருக்கே வெளிச்சம்.

சினிமா என ஒன்று இருந்தால்தானே அங்கிருந்து மாதத்திற்கு ஒரு முதலமைச்சர் கிளம்புவார்? கொல்றேன்டா அதை என்று கொல்லாமல் கொல்கிற சூட்சுமம்தான் இதுவோ?

https://youtu.be/FXsclsRSQkE

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
ஜெய் அஞ்சலி காதல் முறிவு! பலூன் பிரமோஷனுக்கு ஜோடியாக வருவார்களா?

Close