போஸ்டர் கூட ஒட்டக்கூடாதாம்! இதில் அஜீத் படம் எப்படி?

க்யூப் மற்றும் தியேட்டர்களின் அட்ராசிட்டியை ஒழுங்கு படுத்தும் திட்டத்தில் ஒரு ஸ்டெப் அல்ல, பல ஸ்டெப்புகள் முன்னேறி நின்று அடித்து வருகிறது தயாரிப்பாளர் சங்கம். முன்பு சங்கத் தலைவர் விஷாலுக்கு எதிராக நின்று கேம் ஆடிய முக்கிய தயாரிப்பாளர்கள் பலரும், இப்போது விஷால் சப்போர்ட் மன நிலையில் இருப்பதால் நினைத்ததை நடத்தியே தீருவேன் என்று ஃபுல் ஸ்பீட் காட்டி வருகிறார் விஷால்.

மார்ச் 16 முதல் படப்பிடிப்புகள் ரத்து, போஸ்ட் புரடக்ஷன் பணிகள் நிறுத்தம், பிரஸ்மீட்டுகள் இல்லை, நாளிதழ் விளம்பரங்கள் நோ, அவ்வளவு ஏன்? ஊரெங்கும் ஒட்டப்படும் சினிமா போஸ்டர்களுக்கும் தடை. போஸ்டர் ஒட்டுவோர் சங்கத்தை அழைத்து பேசிய தயாரிப்பாளர் சங்கம், பிரச்சனை முடியும் வரை எந்த சினிமா போஸ்டரும் ஒட்டக் கூடாது என்று கூறிவிட்டது.

நிலைமை இவ்வளவு சீரியஸ் ஆக இருக்க… ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் விஸ்வாசம் படத்திற்காக செட் போடும் வேலைகள் மட்டும் நிறுத்தப்படவில்லை. ஏன்? முதன் முறையா ஆரம்பிச்சுருக்கோம். சென்ட்மென்ட்டா நிறுத்த வேண்டாம் என்று கூறிவிட்டாராம் தயாரிப்பாளர் சத்யஜோதி தியாகராஜன். ஒரு வேளை மார்ச் 23 க்குள் பிரச்சனை முடிந்துவிட்டால், அதே செட்டில் விஸ்வாசம் ஷுட்டிங்கை தொடர்வோம். இல்லாவிட்டால், பிரச்சனை முடிகிற வரைக்கும் செட் அப்படியே இருக்கட்டும் என்ற முடிவுக்கு வந்திருக்கிறார்களாம்.

ஆக மொத்தம், திரையுலக பிரச்சனை முடிகிற வரைக்கும் ‘விஸ்வாசம் ’ படப்பிடிப்பு என்கிற பேச்சுக்கே இடமில்லை!

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
டிரைவர் செய்த காமெடி கூத்து

https://www.youtube.com/watch?v=n9QXvvBF2Ck

Close