செய்கூலி தர்றேன் சேர்த்துக்கங்கப்பா! பரபரப்பு கிளப்பும் பப்ளிக் ஸ்டார்!
முட்டையாக இருக்கும் போதே, அதை முழு கோழியாக எண்ணி நோக்குகிறவனால் மட்டுமே சினிமாவில் இயக்குனராக ஜெயிக்க முடியும். நாம் சொல்லப் போகிற முட்டையும் முழுக்கோழியும் பப்ளிக் ஸ்டார் என்ற பட்டத்தோடு கரையேறிய துரை சுதாகர்தான்.
முதல் படம் தப்பாட்டம். “தப்பு பண்ணிட்டீயே தல…” என்று அருகிலிருப்பவர்களே அலறுகிற அளவுக்கு எடுக்கப்பட்ட படம் அது. “போதும்டா உப்புமா குண்டான்ல வெந்தது…” என்று அஞ்சி நடுங்கிய பப்ளிக் ஸ்டார், சுதாரித்து எழுவதற்குள் மூன்று படம் எடுத்துவிட்டார்கள் இவரை வைத்து. நல்லவேளையாக காலம் கடப்பதற்குள் புத்தி வந்தது.
“என்னை நல்ல நிலைமையிலதான் வச்சுருக்கான் ஆண்டவன். சம்பளம் வாங்காம நடிக்க முடியும். அது ஒண்ணும் பெரிய விஷயமில்ல. ஆனால் சம்பளம் கொடுத்து கூட நடிக்க தயாராக இருக்கேன். பெரிய நடிகர்களை வச்சு படம் எடுக்கும் இயக்குனர்கள் அந்தப்படத்தில் ஒரு கேரக்டர் ரோல் கொடுத்தா போதும். பதிலுக்கு பலன் செய்ய நான் ரெடி” என்று கூற ஆரம்பித்திருக்கிறார் இப்போது.
போலிகளை அடையாளம் கண்டு கொள்கிற அளவுக்கு புத்தி கொள்முதல் செய்துவிட்டதால், இந்த துரை சுதாகரை ஒரிஜனல்கள் ஒருமுறை ட்ரை பண்ணி பார்க்கலாம்.