சிம்புவின் அம்மா உஷாவும் இப்போ பாடியாச்சு! மவுசு கூடும் சந்தானம் படம்!
சந்தானம் நடிக்கும் ‘சக்கப்போடு போடு ராஜா’, நாளுக்கு நாள் மெருகேறிக் கொண்டேயிருக்கிறது. படத்தில் நட்புக்கு முக்கியத்துவம் இருக்கிறதோ, இல்லையோ? நிஜத்தில் செம மரியாதைப்பா இந்த நட்புக்கு!
இந்தப்படத்தில் எப்படியாவது அனிருத்தை இசையமைப்பாளர் ஆக்கிவிடலாம் என்று கிளுகிளுப்பை ஆட்டிப்பார்த்த சந்தானத்திற்கு சவுண்ட் எடுபடவே இல்லை. இத்தனைக்கும் சம்பளத்தை பற்றியெல்லாம் ஒரு கெடுபிடியும் இல்லாமல்தான் பேசினார். ஆனால் சிவகார்த்திகேயனின் கட்டுப்பாடுகளுக்குள் இருந்த அனிருத், சந்தானத்தின் அழைப்பை சட்டை செய்யவே இல்லை.
அந்த நேரத்தில்தான் நான் இருக்கேன் நண்பா… என்று கை கொடுத்தார் சிம்பு. வடை நழுவி வாய்க்குள் விழுந்த மாதிரி, சிம்புவே வந்து சிங்காரிக்க ஆரம்பித்ததில் ரொம்பவே ஹேப்பி ஆனார் சந்தானம். மளமளவென கம்போசிங் நடந்து சில பாடல்களின் ரெக்கார்டிங்கை முடித்துவிட்டார்கள்.
அதில் ஒரு பாடல்தான் வா முனிம்மா வா… இந்த பாடலை சிம்புவுடன் சேர்ந்து அவரது அப்பா டி.ஆரும், அம்மா உஷாவும் பாடியிருக்கிறார்கள். முதன் முறையாக உஷாவும் பாடியிருப்பதால், பாடலுக்கு இப்பவே செம கெத்து சேர்ந்திருக்கிறது.
யூ ட்யூப் மட்டுமல்ல, ஆல் ட்யூபும் அலறும் போலிருக்கே!
https://youtu.be/n9j3VEb5TZc