வேந்தர் மதன் அரெஸ்ட்! சிவகார்த்திகேயன் ரிலீப்! ‘ உள்ளே வெளியே ’ விளையாட்டு!

கிரைண்டர்ல, மாவுக்கு பதிலா மிக்சியவே போட்டு அரைச்ச மாதிரி, சமயங்களில் பெரிய பெரிய ஹீரோக்களுக்கே பேதி மாத்திரை கொடுத்துவிடும் காலம்! தமிழ்சினிமாவில் டாப் ஐந்தில் இருக்கும் சிவகார்த்திகேயனுக்கு போன மாசம் முழுக்க போகி.

இந்த மாசம்… அதுவும் இந்த வாரம்…? செம ராசியான பொங்கல்! போட்டுக் கொளுத்துற போகிக்கு மறுநாள் பொங்கல் வருவது இயற்கைதானே? இவர் வாய்க்கு ருசியாக அமைந்த அந்த பொங்கல், வேந்தர் மூவிஸ் மதனின் அரெஸ்ட்தான். போன மாதம் கூடிய தயாரிப்பாளர் சங்கம், சிவகார்த்திகேயனின் சில மாத இழுபறிக்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்தது. ஞானவேல்ராஜாவுக்கு ஒரு படம். வேந்தர் மூவிஸ் மதனுக்கும் எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் மதனுக்கும் சேர்த்து ஒரு படம் என்று பஞ்சாயத்தை முடித்து வைத்தது சங்கம். சிவகார்த்திகேயன் மடக்கப்பட்டதற்கு முக்கிய காரணமே, அவர் வேந்தர் மூவிஸ் மதனிடம் அட்வான்ஸ் வாங்கிவிட்டார் என்பதால்தான். ஆனால் “நான் கை நீட்டி பணம் வாங்கல… கை நீட்டி பணம் வாங்கல…” என்று சொல்லிக் கொண்டேயிருந்தார் சிவா.

ஆனாலும் செவியை மூடிக் கொண்டு சிவனே என்று இருந்தது பஞ்சாயத்து. இந்த நிலையில்தான் சில தினங்களுக்கு முன் கைது செய்யப்பட்டார் வேந்தர் மூவிஸ் மதன். அவரை போலீஸ் காவலில் எடுத்து விசாரித்து வருகிறார்கள். விசாரணையில் மாணவர்களிடம் வாங்கிய கடனை அவர் யாருக்கெல்லாம் கொடுத்திருக்கிறார். எங்கெல்லாம் பதுக்கி வைத்திருக்கிறார் என்று கேள்விகள் எழுப்பட்டுள்ளது. சிவகார்த்திகேயனுக்கு அட்வான்ஸ் கொடுக்கப்பட்டதா என்ற கேள்விக்கு பதிலளித்த மதன், ‘இல்லை’ என்று தெளிவாக கூறிவிட்டார்.

நடிகர் சிவகார்த்திகேயனிடம் கால்ஷீட்டோ பணமோ வாங்கித்தரச் சொல்லி தான் தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் ஏதுவும் தெரிவிக்கவில்லை எனவும், தயாரிப்பாளர் சங்கம் செய்யும் கட்டப்பஞ்சாயத்துக்கும் தனக்கும் துளியும் சம்பந்தமில்லை எனவும் வேந்தர் மூவிஸ் மதன் தெரிவித்துள்ளதாக அவரது வழக்கறிஞர் இன்பென்ட் தினேஷ் தெரிவித்திருக்கிறார். நடிகர் சிவகார்த்திகேயனிடம் வாய்மொழியாக தான் கால்ஷூட் கேட்கப்பட்டதாகவும், முன்பணம் கொடுக்கவில்லை என்றும் வேந்தர் மூவிஸ் சார்பில் யாரும் கால்ஷிட் கேட்க கூடாது என்றும் மதன் தன்னுடைய வழக்கறிஞர் இன்பென்ட் தினேஷ் மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஆகக் கடைசியில் மதன் அரெஸ்ட், சிவகார்த்திகேயன் நிம்மதி!

 

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
பகையில்லை பராபரமே! நாசர் பேமிலிக்கு தாணு சப்போர்ட்!

சில பிளாஷ்பேக்குகளை நினைத்துப் பார்க்க மண்டையை குடைந்து கொள்ள வேண்டிய அவசியமில்லை. வினாடி நேரம் போதும். நடிகர் சங்கத் தேர்தலில் நாசர் அணிக்கு எதிராக களமாற்றியவர் தயாரிப்பாளர்...

Close