பாலாவால் வெற்றிமாறன் டென்ஷன்! நடந்து இதுதான்!

இது படைப்பாளி திமிர்ப்பா என்று எவ்வளவுதான் பொறுத்துக் கொண்டாலும்,  தன்னை நம்பி பணம் போட்டவர்களை ‘கடுப்பாளி’ ஆக்குவதில் பாலாவை மிஞ்ச ஆளே இல்லை. வருஷக்கணக்கில் ஷுட்டிங். அரத பழசான கதைக் களம். உண்மைக்கு சம்பந்தமில்லாத காட்சியமைப்புகள் என்று பாலா ஒவ்வொரு முறை ‘ரத்தம் பார்க்கும் போதெல்லாம்’ (?) இவருக்கு இதே வேலயா போச்சு என்று அலறுவார்கள் ரசிகர்கள்.

ஆனால் அதே ரசிகர் கூட்டத்தில் பாலா என்ன பண்ணினாலும் சூப்பர்டா என்று சொல்வதற்கும் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் இருப்பதால், இப்பவும் பாலா படம் ரிலீஸ் ஆகிற நாளில் முதல் ஷோ ஹவுஸ்புல் என்கிற அதிசயம் நடந்து கொண்டே இருக்கிறது. அடுத்தடுத்த ஷோக்கள் அப்படியாகாதளவுக்கு பாலாவே பார்த்துக் கொள்கிற சம்பவங்களும் அண்மையில் நிகழ்ந்து வருவதால், ‘பாலா பழசாகி விட்டார்’ என்கிற கருத்தும் இல்லாமல் இல்லை.

இந்த நிலையில்தான், சாட்டை யுவன் நடிக்கும் ஒரு புதிய படத்தை துவங்கினார் அவர். நல்லவேளை… இது அவரது சொந்த காசில் துவங்கப்பட்ட படம். சில வாரங்கள் ஷுட்டிங் நடந்த நிலையில் அதை போட்டுப் பார்த்த பாலா, சேச்சே… இது சரிப்படாது என்று முடிவு செய்து அதை அப்படியே சுருட்டி ஓரமாக வைத்துவிட்டார்.

இனி நாமே எழுதுகிற கதையை படமாக்குவதை விட, மண்டபத்தில் வாங்கி சமாளிக்கலாம் என்ற முடிவுக்கும் வந்திருக்கிறார். இந்த இடத்தில்தான் வெற்றிமாறனின் விதியில், சுத்தியல் சவுண்டு! என்னவாம்?

பாலு மகேந்திராவின் உதவி இயக்குனர் ஒருவர் வைத்திருந்த கதையை படமாக்க நினைத்து அவரை தன் கஸ்டடியில் வைத்திருந்தார் வெற்றிமாறன். கால சூழ்நிலை, பொருளதார பொல்லாப்பு எதுவும் சரியாக அமையாத காரணத்தால் அந்த முயற்சியை வேகமாக முன்னெடுக்க முடியாத நிலை. இந்த விஷயம் பாலாவுக்கு தெரியவர, மேற்படி உதவி இயக்குனரை அழைத்து பேசினாராம். வெயிட்டாக ஒரு தொகை கைமாற… கதையும் கைமாறிவிட்டது.

ஆனால் மற்றவர்கள் போல, திருட்டுக் கதைக்கு உரிமை கொண்டாடுகிற சின்ன மனுஷன் இல்லை பாலா. டைட்டிலில் மூலக்கதை என்று அந்த அசிஸ்டென்ட் பெயர் வருகிறதாம். நம் கம்பெனிக்காக வைத்திருந்த கதை இப்படி கை மாறிவிட்டதே என்கிற வருத்தத்தில் இருக்கிறாராம் வெற்றிமாறன்.

ஆணானப்பட்ட பாலாவுக்கே, கதை வறட்சி வந்தால் நாட்ல ஏன்ப்பா தண்ணி பஞ்சம் வராது?

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
ஈழத்தமிழருக்காக குரல் கொடுக்குறீங்க! ஆனால் அவங்கதான் திட்றாங்க! ரஜினியால் புரிந்த உண்மை!

Close