விஜய் கீர்த்தி சுரேஷ் லண்டனுக்கு ரகசிய பயணம்? கோடம்பாக்கத்தில் பரபரப்பு
‘பைரவா’ ஜோடி, படத்திற்கு அப்பாலும் ஜோடியாக திரிந்தால் ஊர் கண், உலகத்தின் கண் எல்லாம் புண்ணாகி புரையோடிப் போகுமல்லவா? அப்படிதான் ஆகிவிட்டது விஜய் கீர்த்தி சுரேஷ் ஜோடியின் நிலைமை. கடந்த சில தினங்களுக்கு முன் லண்டனுக்கு கிளம்பிவிட்டார்கள் இருவரும். இந்த பயணம் எல்லாருக்கும் சொல்லப்பட்டு ஊர் அறிய கிளம்பிய பயணமாக இருந்தால் ஒரு பிரச்சனையுமில்லை. தனியாக, யாருக்கும் சொல்லாமல் கிளம்பியதுதான் சொரேர்…
இந்த தகவல் தெரிந்ததுமே கீர்த்தியின் மீது பொறாமை கண்ணோடு திரியும் சில ஹீரோயின்கள், “தெரியுமா விஷயம்… இப்படியெல்லாம் நடக்குதாமே?” என்று கொளுத்திப்போட ஆரம்பித்துவிட்டார்கள். ஒருவர் இருவருக்கு சொல்லி, இருவர் இன்டஸ்ட்ரிக்கே சொல்லியதால் றெக்கை கட்டி பறக்கிறது கோளாறு.
ஆனால் கீர்த்தி தரப்பில் விசாரித்தால், “அவ்வளவும் திட்டமிட்ட வதந்தி. அவங்க ஒண்ணும் பர்சனல் டூர் போகல. படம் சம்பந்தமான பிரமோஷனுக்கும், அங்கிருந்து அழைத்த சில அமைப்புகளின் விழாக்களுக்கும்தான். ரகசிய பயணம் போகிறவர்கள் ஏன் பப்ளிக் பங்ஷனில் கலந்துக்கணும்?” என்கிறார்கள்.
பப்ளிக் பங்ஷன்ல கலந்துகிட்ட போட்டோ கீட்டோ இருந்தா அள்ளிக் கொட்டுங்கப்பா… ஊர் வாயை அதை வச்சே அடைக்கலாம்.
https://youtu.be/tvx0edxFhNE