சம்பளத்தில் இவ்ளோ பர்சென்ட் உங்களுக்கு! தனித்தனியாக லிஸ்ட் போட்ட விஜய்!

பூ கொடுத்த மரத்தின்… வேர் நனைக்க நினைப்பதே நல்லது! இப்படியொரு எண்ணத்தை தன் மனதில் ஆழமாக பதிந்துவிட்டார் போலிருக்கிறது விஜய். கடந்த சில படங்களாகவே திடீரென ஒரு முடிவெடுத்து அதை தில்லாக செய்து வருகிறார் அவர். இப்படியொரு செயலை வேறெந்த நடிகர்களும் செய்வதில்லை என்பதுதான் விசேஷம்.

தனது படம் திரைக்கு வரும் போதெல்லாம் தான் வாங்கும் சம்பளத்திலிருந்து பத்து லட்சம் ரூபாயை சினிமாவின் முக்கிய சங்கங்களுக்கு நன்கொடையாக வழங்க முடிவெடுத்திருக்கிறார். முதன் முதலில் அதை தயாரிப்பாளர் சங்கத்திலிருந்து தொடங்கிய விஜய், அதற்கப்புறம் இயக்குனர் சங்கத்திற்கு நிதி கொடுத்திருக்கிறார். தெறி பட சம்பளத்திலிருந்து ஒளிப்பதிவாளர் சங்கத்திற்கு பெரும் தொகை ஒன்றை கொடுத்தவர், தற்போது பைரவா படத்தின் சம்பளத்திலிருந்து பத்து லட்சத்தை எடுத்து எடிட்டர் அசோசியேஷனுக்கு வழங்கியிருக்கிறார்.

தமிழ்சினிமாவில் மொத்தம் 24 சங்கங்கள் இருக்கின்றன. கூட்டிக் கழிச்சுப் பார்த்தால் பெரும் தொகை விஜய்யின் பாக்கெட்டிலிருந்து ஷிப்ட் ஆகும் போல தெரிகிறது.

சங்கங்கள் பாராட்டுகின்றன. மக்கள் பாராட்டுவது எப்போ என்று காத்திருக்கிறார்கள் அவரது ரசிகர்கள். ஏதாவது மன கணக்கு தனிக்கணக்கு இருக்கும்…

https://youtu.be/nKB4HiNbrYE

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
Famous Hero Backing Suchitra To Release Sex Scandals.-The Truth Behind.

https://youtu.be/mZ4lF86H2-g

Close