சிக்கினார் விஜய்! சீண்டக் கிளம்பிய அரசியல்!

கருத்துச் சுதந்திரம் இருக்கிற நாட்டில்தான், ‘கருத்து சொல்றான்பா’ என்கிற விமர்சனமும் இருக்கிறது. அதுவும் தெருவுக்கு நாலு கவுண்டமணிகள் முளைத்தால் செந்தில்கள் பாடு ஐயோ பாவம்! வீரமான விஜய்யாக இருக்க வேண்டிய விஜய், பல சந்தர்பங்களில் பம்மியதை நாடு நன்றாகவே அறியும். அப்போதெல்லாம் போயஸ் தோட்டத்தின் புயலுக்கு ‘கிளை சாய்தார்’ விஜய். இப்போது நிலைமையில் கொஞ்சம் முன்னேற்றம். தன் மனதில் பட்டதை நறுக்குத் தெரித்தது போல சொல்லிவிட்டார் அவர்.

பொதுவாக இப்படியெல்லாம் சினிமாவை தவிர்த்த பிரச்சனை பற்றி சொல்வதற்கு பெரிய திட்டமிடல் இருக்கும் அவரிடம். ஊடகங்களை ஒட்டு மொத்தமாக கூட்டி, அங்கு வரும் சில நிருபர்களிடம் தன் ஆட்களை விட்டு “இந்தந்த கேள்விய கேளுங்க. விஜய் சார் பதில் சொல்வாரு” என்று ரகசிய பரிவர்த்தனையெல்லாம் நடத்தி, அப்புறம்தான் மற்ற மற்ற விஷயங்களுக்கு வருவார் அவர். ஆனால் நேற்று நடந்தது சாதாரண திட்டமிடல் அல்ல. பெரிய்…ய திட்டமிடல். முக்கியமான ஐந்து தொலைக்காட்சி நிருபர்களை மட்டும் அழைத்து வரச்சொல்லி, நேரடியாக மோடியின் பண சீர்த்திருத்தக் கொள்கை பற்றி அதிரிபுதிரியான கருத்தை முன் வைத்துவிட்டு கிளம்பிவிட்டார்.

20 சதவீதம் கருப்புப்பணத்தை மீட்க, 80 சதவீத மக்களை இவ்வளவு கஷ்டப்படுத்தியிருக்கணுமா? மருத்துவ செலவுக்கு கூட பணம் மாற்ற முடியாமல் இறந்து போனவர்களை நினைத்தால் வருத்தமா இருக்கு என்று அவர் விமர்சித்தது பெரிய துணிச்சல்தான். இதற்கப்புறம் பின் விளைவுகள் இல்லாமலிருக்குமா?

பாரதிய ஜனதா கட்சியின் தமிழக பிரமுகர் வானதி சீனிவாசன், விஜய்க்கு சரியான பதிலடி கொடுத்திருக்கிறார். இவர் மட்டுமல்ல, இவரைப் போன்றவர்கள் இனி வரிசை கட்டி விருந்து வைப்பார்கள் என்று நம்பலாம். வானதியின் பதில் இது-

பேத்தி கல்யாணத்துக்கு பணம் இல்லாததால் ஒரு பாட்டி இறந்து விட்டார்… அன்றாட செலவுகளுக்கு பணம் இல்லாமல் மக்கள் கஷ்டப்படுகிறார்கள் என்று சொல்லிக் கொள்ளும் அரசியல்வாதிகளுக்கும், சினிமா பிரபலங்களுக்கும் ஒன்றைச் சொல்லிக் கொள்ள ஆசைப்படுகிறேன். மருத்துவச் செலவுக்கு பணம் இல்லையே என்று இப்போது அல்ல; முன்பும் இறந்து போயிருக்கிறார்கள். ஏழை, எளிய மக்கள் மீது கரிசனம் காட்டும் இவர்கள், தாங்கள் வைத்துள்ள பணத்தில் தங்கள் வாழ்க்கைக்கு தேவையானது போக மீதியை இந்த ஏழை மக்களின் ஜன்தன் வங்கி கணக்கில் போட்டால் ஏழை மக்களின் வேதனை, துயரம் போக்க உதவிகரமாக இருக்கும். அறிக்கை விடுவதை விட்டு விட்டு, பொது வெளியில் வந்து ஏழை எளிய மக்களின் கண்ணீர் துடைக்க உதவுங்கள். நாட்டு மக்களின் பிரச்சினைகளை சரி செய்ய மோடி அரசு தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது என்றார்.

பரவால்ல… மெல்ல அரசியலுக்குள் இழுக்குறாங்களே விஜய்யை?

2 Comments
  1. sandy says

    இப்போ வானதிதான் வாங்கிக்கட்டிக்கிறாரு…

  2. தமிழ்நேசன் says

    போன வருடம் உன் வீட்டில் வருமான வரி துறையினர் சோதனை செய்து சுமார் 12 கோடி ரூபாய் பறிமுதல் செய்தது மறந்து விட்டதா ??? உன்னை போன்ற ஆட்கள் கணக்கில் வராத பணத்தை கருப்பு பணமாக பதுக்கி வைப்பதால் தான் ஏழைகள் ஏழைகளாக இருந்து கஷ்டப்படுகிரார்கள். அப்புறம், சென்ற ஆண்டு டிசம்பர் ௧ மற்றும் 2 தேதிகளில் சென்னையை புரட்டி போட்ட மழை சமயத்தில் நீ நடுத்தெருவில் நின்ற அந்த ஏழைகளுக்கு என்ன செய்தாய் ???

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
கொடிக்குப் பின்- தனுஷ் கேரியரில் ரஜினி தலையீடு?

சிவகார்த்திகேயனின் ரெமோ படத்தை, ரிலீஸ் ஆன நான்கு நாட்களுக்குள்ளேயே பார்த்து நாலு நல்ல வார்த்தைகள் சொல்லிவிட்டு கிளம்பிய சூப்பர் ஸ்டாருக்கு, தன் சொந்த மருமகன் படத்தை

Close