ஜோதிகாவுக்கு பதிலாக அசின்! விஜய் விருப்பம்! பிறகு?
விஜய்யின் அன்புத் தம்பியாகிவிட்டார் அட்லீ. இவருக்கு முன்பே விஜயிடம் கதை சொல்லி அவரது குட் புக்கில் இருந்த இயக்குனர்களை கூட, “கொஞ்சம் வெயிட் பண்ணுங்க” என்று கூறிவிட்டு மீண்டும் அட்லீக்கு ஆதரவு தந்திருக்கிறார் விஜய். கதையும், திரைக்கதையும் செய்த மேஜிக் அது என்றால், அட்லீ விஜய்யிடம் காட்டும் அன்புதான் இந்த ஓவர்டேக்குக்கே காரணம். இந்த நிலையில்தான் திருப்பதி லட்டு சைசுக்கு ஒரு திருஷ்டி பொட்டை வைத்துவிட்டது ஒரு சின்னத் தடங்கல். நாளைக்கு காலையில் ஷுட்டிங் என்றால், அதற்கு முதல் நாளிரவு அட்லீயை அழைத்து, இந்தப்படத்தில் நான் நடிக்கலே… ஸாரி என்று கூறிவிட்டார் ஜோதிகா.
இந்த திடுதிப் முடிவு ஜோதிகா மாதிரி சினிமாவில் அனுபவம் பெற்ற ஒரு நடிகையிடமிருந்து வருவதால் மிகுந்த அதிர்ச்சிக்குள்ளான அட்லீ, என்னென்னவோ சமாதானம் பேசியும் எதுவும் எடுபடவேயில்லை. படு அப்செட்! அந்த நேரத்தில் ஆறுதலாக பேசிய விஜய், “ஒண்ணு பண்ணுங்க… மும்பையில் செட்டில் ஆகிவிட்ட அசினுக்கு போன் அடிங்க. என் படத்தில் நடிக்க அவங்களும் இஷ்டப்படுவாங்க” என்று கூறினாராம்.
அசினை தொடர்பு கொண்டிருக்கிறார் அட்லீ. இன்றைய தேதியில் இந்தியாவின் மிக முக்கியமான தொழிலதிபர்களில் ஒருவருக்கு மனைவியாகிவிட்ட அசின், அட்லீயின் அழைப்பை நிராகரிக்க முடியாமல் தவித்தாராம். இருந்தாலும், “நான் நடிக்கறதை விட்டுட்டேன். இந்தப்படத்தில் பங்கு பெறாமல் போனதற்காக விஜய்யிடம் ஸாரி கேட்டேன்னு சொல்லுங்க” என்றாராம் பக்குவமாக!
அதற்கப்புறம்தான் நித்யா மேனன் ஆபத்திற்கு கை கொடுத்திருக்கிறார்.
https://youtu.be/1ql9KJfjbHQ