மெர்சல் ரிலீசுக்கு முட்டுக்கட்டை? முதல்வரை சந்தித்த விஜய்!

பெரும் நெருக்கடியில் இருக்கிறது மெர்சல். சென்சார் சான்றிதழ் வழங்கப்பட்டுவிட்டாலும் கூட, நடுவில் கட்டையை போடுகிறது விலங்குகள் நல வாரியம். சில காட்சிகளில் வரும் புறா, பாம்பு போன்றவை கிராபிக்ஸ்சில் செய்யப்பட்டது அல்ல என்றும், உயிருள்ள விலங்குகள்தான் என்றும் சாதிக்கும் அந்த அமைப்பு, ‘அப்போது ஏன் மருத்துவரை வைத்துக் கொண்டு படப்பிடிப்பு நடத்தப்படவில்லை?’ என்றெல்லாம் கேள்வி எழுப்பி இம்சை கொடுக்கிறதாம்.

எவ்வளவு பேசியும் பிரச்சனை தீர்ந்தபாடில்லை என்பதால், இன்று முதல்வர் எடப்பாடியை சந்தித்து முறையிட சென்றிருக்கிறார் விஜய்.

எப்பவும் விஜய் படங்கள் திரைக்கு வரும்போதெல்லாம் ஏதாவது ஒரு சிக்கலை ஏற்படுத்தி மகிழும் விஷப்பாம்பு மனசுக்காரர்கள் யாரேனும் இந்த விவகாரத்திலும் மூக்கை நுழைத்திருக்கலாம் என்கிற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதுபோக ஒரு தலைவன் உருவாகுவதை பற்றி விஜய் பேசும் ட்ரெய்லர் வசனம் ஒன்று ஆளுங்கட்சி வட்டாரத்தை அதிருப்திக்கு ஆளாக்கியிருப்பதாகவும் சந்தேகம் இருக்கிறது.

முதல்வர் எடப்பாடி- விஜய் சந்திப்பு எல்லா சலசலப்புக்கும் முற்றுப்புள்ளி வைக்குமா? மெர்சல், தீபாவளிக்கு வருமா?

டென்ஷனை கிளப்புறாங்களே….

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
ஹீரோவுடன் பேசவே விடல! ஃபீல் பண்ணுகிறார் ‘பள்ளிப் பருவத்திலே ’ ஹீரோயின்!

https://www.youtube.com/watch?v=V_Rrt6bGr5c&feature=youtu.be

Close