ஜுங்கா விஷயத்தில் விஜய் சேதுபதி செய்தது தவறா, இல்லையா?
அவருக்கு மட்டும் தனி நீதியா? என்று முரசு கொட்டி, போர் நடத்தக் கிளம்பிவிட்டார்கள் சில தயாரிப்பாளர்கள். எல்லாம் அந்த ஜுங்கா ஷுட்டிங்கால் வந்த விளைவு. போர்ச்சுகீசியாவில் ஜுங்கா ஷுட்டிங்கில் இருக்கிறார் விஜய்சேதுபதியும் அவரது டீமும்.
இதையடுத்து பேய் குலைச்சு ஊர் விழிக்கிற அளவுக்கு ஒரே கசாமுசா. அவருக்கு மட்டும் தனி சட்டமா? அவர் மீது தயாரிப்பாளர் சங்கம் நடவடிக்கை எடுக்காதா? இப்படி…
நிஜத்தில் நடந்ததே வேறு என்கிறார்கள் ஜுங்கா தரப்பில். போர்ச்சுகீசியாவில் படப்பிடிப்பு நடத்த முன் அனுமதி, விசா எல்லாவற்றுக்கும் பணம் கட்டிவிட்டார்களாம். இவர்கள் திட்டப்படி 10 ந் தேதி விசா கிடைத்துவிடும் என்கிற நிலைமை. தயாரிப்பாளர் சங்கம் கெடு விதித்த மார்ச் 23 க்குள் திரும்பிவிடலாம் என்பது கணக்கு. ஆனால் இவர்களின் போதாத நேரம், விசா கிடைப்பதில் சிக்கல். 16 ந் தேதிதான் கிடைத்ததாம். இந்த பயணத்தை விட்டால் மறுபடி குரூப் விசா எடுப்பதில் சிக்கல் வரும் என்பதால், விளக்கமாக சங்க தலைமைக்கு தெரிவித்துவிட்டுதான் கிளம்பினார்களாம்.
அதற்குள் விஜய் சேதுபதி மீது நடவடிக்கை கோரி சிலர் குடைச்சல் கொடுக்க ஆரம்பித்திருக்கிறார்கள். விளக்கமா சொன்னாலும், விளக்கெண்ணையா வழுக்குவாங்களே? எப்படிதான் சமாளிக்கப் போகிறாரோ?