ரசிகர்களை பதம் பார்த்த விஜய் சேதுபதியின் செக்யூரிடிகள்!
நடிகர்களை பார்க்கிற ஆர்வத்தில் குவியும் ரசிகர்களுக்கு சமயங்களில் சர்க்கரை பொங்கலும் கிடைக்கும். சமயங்களில் தர்ம அடியும் கிடைக்கும். விஜய் பட ஷுட்டிங் பார்க்க குவிந்து போலீசாரால் தடியடிக்கு ஆளான ரசிகர்களுக்கு இன்னும் அந்த காயம் கூட மறைந்திருக்காது. அதற்குள் விஜய் சேதுபதி ரசிகர்களுக்கு செம தர்ம அடி விழுந்திருக்கிறது.
இது பாண்டிச்சேரி பல்ப்! தேர்தல் போலீசின் வேலை பல்வேறு விதங்களில் பிரிந்து கிடப்பதால் இனி போலீசை நம்பி பிரயோஜனம் இல்லை என்று முடிவெடுத்திருக்கிறார் வி.சே. கையோடு பிளாக் கேட்ஸ் செல்கிறார்கள் இப்போது. அப்படி பாண்டிச்சேரி ஓட்டல் ஒன்றில் இவருக்கு பாதுகாப்பாக நின்றிருந்த கருப்பு பூனைகள் அங்கு திரண்டு வந்த ரசிகர்களை பதம் பார்த்துவிட்டார்கள்.
கொதித்துப்போன ரசிகர்கள், வி.சே விடம் பஞ்சாயத்து வைத்தார்களாம்.