சம்பள மாற்று முறை! சம்மதிக்க தயங்கும் விஜய் சேதுபதி?

கப்பல் படகாச்சு… படகும் படுத்தாச்சு… என்கிற நிலைமையில்தான் இருக்கிறது தமிழ்சினிமா. எல்லா பணத்தையும் அவங்களே பிடுங்கிட்டாங்கன்னா நாங்க எப்படி படம் எடுக்கறதாம்? என்கிற எரிச்சலை முன் வைத்து பேச ஆரம்பித்திருக்கிறார்கள் தயாரிப்பாளர்கள். அதாவது, ஒரு படத்தின் பட்ஜெட்டில் கால்வாசிதான் படத்துக்கு செலவிடப் படுகிறது. மீதியெல்லாம் ஹீரோ மற்றும் டெக்னீஷியன்களின் வாய்க்கு போய்விடுகிறது என்பதுதான் அதன் அர்த்தம்.

இதை எப்படியாவது தடுத்து ஹீரோக்களுக்கு தருகிற சம்பள முறை மாற்றப்பட வேண்டும் என்று களமிறங்கிருக்கிறது தயாரிப்பாளர் சங்கம். முதல் கட்டமாக ஹீரோக்களை வரவழைத்து பேசினார்கள். சிம்பு, விஜய் சேதுபதி தவிர அங்கு வந்திருந்த பலரும் அடுத்த வேளை படத்திற்கு ஆவலோடு காத்திருப்பவர்கள்தான். இந்த லட்சணத்தில் எப்படி இது குறித்து முடிவெடுப்பதாம்? போகட்டும்… வந்தவர்களின் எண்ணம் என்ன?

விஜய் சேதுபதிதான் முரண்டு பிடித்தாராம். ஏற்கனவே நான் நடிக்கிற படங்களுக்கெல்லாம் கடைசி நேரத்தில் ஒரு கோடியோ, ரெண்டு கோடியோ பாக்கி வச்சுடுறாங்க. அந்தப்பணம் போனது போனதுதான். நேர்மையில்லாத தயாரிப்பாளர்களிடம், பத்து சதவீதம் மட்டும் முன்னாடி கொடுங்க. மீதிய படம் முடிஞ்சு கொடுங்கன்னு சொன்னா, அது வரும்னு என்ன உத்தரவாதம் இருக்கு? என்று கேட்டாராம்.

அதற்கான திட்டம் வகுக்கப்படும் என்று பதில் சொல்லப்பட்டதாம் அவருக்கு. அப்படியொரு திட்டம் அமையாத வரைக்கும் என் சம்பள முறையை நான் மாற்றிக் கொள்ள தயாராக இல்லை என்றே கூறிவிட்டாராம் விஜய் சேதுபதி.

அவரே இப்படி சொல்லிட்டாரா? அப்ப நாமளும் அதையே சொல்வோம்னு இறங்கிடுவாங்களே?

1 Comment
  1. Joseph says

    சம்பள மாற்று முறைக்கு, சுயநலவியாதிகள் அஜித் விஜய் ஒத்துக்கொள்வார்களா என கேட்டு சொல்.

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
Mr.Chandramouli Trailer

https://youtu.be/z3v1CYYKwdU

Close