விஜய்க்கு குடைச்சல்! அமைதிகாக்கும் ‘அனுபவ ’ ஹீரோக்கள்!

பத்து கோடி பெனாலிடி போடுங்க சார்… என்று கோர்ட் வாசலை நாடியிருக்கிறார் ஒருவர். எதுக்காம்? விஜய் சர்கார் பட போஸ்டரில் தம்மடிப்பது போல ஒரு போஸ் கொடுத்திருந்தார் அல்லவா? அதற்குதான்!

அந்த படத்தை ட்விட்டர் மற்றும் பேஸ்புக் போன்ற வலைப்பக்கங்களிலிருந்து உடனே நீக்க வேண்டும் என்று கோர்ட், சன் பிக்சர்சுக்கு உத்தரவிட்டதை தொடர்ந்து அவை நீக்கப்பட்டன. அதோடு விட்டார்களா? சன், முருகதாஸ், விஜய் மூவரும் இணைந்து முப்பது கோடி பெனாலிடி கட்ட வேண்டும். அதை ராயப்பேட்டை அரசு புற்றுநோய் மையத்திற்கு செலுத்த வேண்டும். இதுதான் மனுதாரர் கோரிக்கை.

அதை ஏற்றுக் கொண்ட கோர்ட், சம்பந்தப்பட்டவர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப… கோடம்பாக்கத்தில் குய்யோ முய்யோ. இப்படியொரு பிரச்சனை ஏற்பட்ட நேரத்தில், ஒருவர் கூட முன் வந்து “இது தப்பு. படத்துல தம்மடிப்பது போல கேரக்டர் இருந்தா அதை வச்சுதானே ஆகணும்?” என்றெல்லாம் வாதாடவே இல்லை. அவருக்கு வந்தது அவருக்கு. நமக்கு வந்தா நமக்கு என்று கமுக்கமாக கழன்று கொண்டார்கள்.

முன்னணி நடிகர்களான ரஜினி, கமல், அஜீத், விக்ரம், சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி உள்ளிட்ட எவரும் வாயை திறக்கவில்லை. நடிகர் சங்கம், மற்றும் தயாரிப்பாளர் சங்கத்தின் பொறுப்பில் இருக்கும் விஷால், மறந்தும் கூட கொட்டாவி விட வில்லை. அவ்வளவு ஏன்? “இதெல்லாம் கொஞ்சம் ஓவரா தெரியலயா உங்களுக்கு?’ என்று சம்பந்தப்பட்ட அந்த விஜய் கூட பேசவில்லை.

ஆனால் சிம்புவும், அவரது அப்பா டி.ஆர் மட்டும் விஜய்க்கு ஆதரவாக குரல் கொடுத்திருக்கிறார்கள்.

சிகரெட் போஸ்டர் நல்லதா, கெட்டதா? விஜய் அஜீத் என்றால் மட்டும் பொங்குகிற பொதுநலவாதிகள், ஏன் சசிகுமார் மாதிரியான நடிகர்களை மட்டும் விட்டுவிடுகிறார்கள்? என்பதெல்லாம் ஒருபக்கம் இருக்கட்டும்…

யாருக்கு வந்தா எனக்கென்ன என்கிற போக்கு சினிமாவுலகத்தில் இருக்கும் வரை, ‘மேல் சட்டை பட்டன் ஏன்யா போடல?’ ‘செருப்புல ஒரு பக்கம் பாலீஷ் குறைஞ்சுருக்கே ஏன்?’ என்பது வரைக்கும் கூட மூக்கை நுழைத்து முஷ்டியை தூக்குவார்கள். ஜாக்கிரதை… அம்புட்டுதான் சொல்லியாச்சு!

3 Comments
 1. Kannan says

  Mersal team released that photo for publicity ( your friend bismi also said that)
  30 Cro case won’t stand even a small baby know about it
  This is publicity for their movie

  Simbu n tr taliking 3 weeks after on the day of their movie title release. Actor director, producer tagging their movie title with sakar
  Exactly for their publicity
  This is a news and you are praising simbu. I don’t doubt there will be many simbu praising video.
  Your friend suresh kamatchi producing for Dhannu all know that.
  I am also Vijay fan n hate caste politician Anbumani
  But what he said is right….. Vijay is a mass hero not like others putting a title photo with cig not right.
  Sry I don’t have Tamil font.

 2. Arasan says

  Simbu, Suresh Kamatchi, TR are cheap publicity fellows. AR Murugadoss, Vijay also wanted publicity for their movie, now they have pay Fine for their mistake.

 3. Arokiyaraj says

  ஜோசப் விஜய், சிலம்பரசன் ரெண்டு பேருமே, தமிழ் சினிமா நடிகர்களில் சுயநலம் தற்பெருமை சுயவிளம்பரம் கொண்டவர்கள் .
  எப்பொழுதும் புகழ் வெளிச்சத்தில் வாழ ஆசை படுவார்கள். அதற்காக காசை வாரி இறைப்பவர்கள். தமிழ் இனத்தின் துரோகிகள் இவர்கள் . இவர்களின் ரசிகர்கள் முட்டாள்கள்.

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
‘A’dult Films அதில் என்ன தப்பு? Simbu Exclusive Interview Part – 3 Final

https://www.youtube.com/watch?v=Kzo4MxDNrn8

Close