ஃபிப்டி பர்சென்ட் பிராபிட்! விஜய்யின் ஸ்மார்ட் திட்டம்
தாண்டிக் குதிக்கிறேன்னு தடுக்கி விழுவதில்லை விஜய்! ஆனால் அவசரத்திலும் ஒரு நிதானம்… நிதானத்திலும் ஒரு அவசரம் என்பதாக போய் கொண்டிருக்கிறது அவரது ஸ்பீட்! விஜய் 63 க்கு இன்னும் பெயரே வைக்கவில்லை. (ஆனால் சி.எம் என்று சுருக்கமாக அழைக்கிற அளவுக்கு ஒரு பெயரை ச்சூஸ் செய்து வைத்திருக்கிறார்களாம்) அதற்குள் விஜய் 64 ஐ நோக்கி நகர்ந்திருக்கிறார் மனுஷன்.
‘மாநகரம்’ பட இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்க, தனது நெருங்கிய உறவினர் பிரிட்டோவின் தயாரிப்பில் நடிக்கப் போகிறார் விஜய். விஸ்வாசம் படத்தின் தமிழ்நாடு கலெக்ஷன் 163 கோடி. அப்படியிருக்க… தனது பட கலெக்ஷனும் அதை தாண்டி இருக்க வேண்டும் என்று நினைப்பதுதானே ஆரோக்யமான போட்டி? அதற்காகவே நேரம் ஒதுக்கி அடித்து சலித்து கதையை கேட்டு வந்த விஜய் லோகேஷை இயக்க வைத்ததே ஒரு ஸ்மார்ட் யோசனைதான். இளம் தலைமுறை இயக்குனர்கள் பிரமிக்க வைக்கிறார்கள். அவர்களோடு பயணிக்க வேண்டும் என்ற முடிவை விஜய் எடுத்ததே அரைத்த மாவுக்கு இனி வேலையில்லை என்பதை காட்டுகிறது.
ஒரு முக்கியமான விஷயம். இந்தப்படத்தின் லாபத்தில் ஐம்பது சதவீதம் விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சி க்கு என்பதாக முடிவாகியிருக்கிறது. இதுபோக விஜய்க்கு தனி சம்பளமாம்! சொந்தக்காரரிடமே இத்தனை பர்சன்டேஜ் கொடுக்கல் வாங்கலா?
தாயும் புள்ளையும் ஒண்ணுதான். ஆனா வாயும் வயிறும் வேற வேற!
சுயநலவியாதிகள் அஜித் மற்றும் விஜய் காசு வாங்கி கொண்டு ஜால்ரா அடிக்கிற டா
ஜால்ரா சத்தம் காத்து கிழியுதுடா . நீ ஒரு விஜய் மற்றும் அஜித் சொம்பு தூக்கி .