மணிரத்னம் விஜய்சேதுபதி! கடைசியில் இப்படியாகிடுச்சே?
கிறிஸ்துவராக இருந்தால் ஒருமுறையாவது வாடிகன் செல்ல வேண்டும். இஸ்லாமியராக இருந்தால் ஒருமுறையாவது மெக்காவுக்கு செல்ல வேண்டும். இந்துவாக இருந்தால் ஒருமுறையாவது காசிக்கு செல்ல வேண்டும். அதுவே அவர் நடிகராக இருந்தால் ஒரு முறையாவது மணிரத்னம் படத்தில் நடித்துவிட வேண்டும். இப்படியொரு பெருமைக்குரிய (வராக இருந்த) மணிரத்னம் இப்போதும் அப்படியா என்றால், நஹிஹே!
ஆனாலும் சிதலமடைந்து போனாலும் செஞ்சிக் கோட்டை கோட்டைதானே? மணிரத்னம் படத்தில் நடிப்பதற்காக தன்னுடைய தேதிகளையெல்லாம் கூட அடிச்சு பிடிச்சு துவைச்சு ஒழிச்சுக் கொடுக்கிற அளவுக்கு துரிதமாக இருந்த விஜய்சேதுபதிக்கு சின்னதாக ஒரு பின்னடைவு. ஏன்?
படத்தில் இவர் மட்டும் ஹீரோ இல்லையாம். இன்னும் மூன்று பேர் இருக்கிறார்களாம். அவர்களில் ஒருவர் துல்கர் சல்மான் என்கிறார்கள். மற்ற இருவரும் கிட்டதட்ட அந்த தகுதியில் இருப்பார்கள். இப்படி கூட்டத்தில் கோவிந்தா போடுகிற வேலைக்கா இவ்வளவு குமைச்சல் ஆனோம் என்று நினைப்பதுதானே மனித இயல்பு? ஆனாலும் செம கூலாக இருக்கிறாராம் விஜய் சேதுபதி.
மணி சார் படத்துல நடிப்பது வரம். அது நாலில் ஒருவரா இருந்தா என்ன? நாற்பதில் ஒருவரா இருந்தா என்ன? ஐயம் ரெடி என்பதுதான் அவரது இப்போதைய மைண்ட் செட்!
https://youtu.be/4tfs_VNXxek