விக்ரம் திருந்தியிருக்கலாம்… யார் கண்டது?
சில்வர்லைன் பிலிம் பேக்டரி பட நிறுவனம் தயாரிக்கும் படத்திற்கு “கருடா “ என்று பெயரிட்டுள்ளனர். இந்த படத்தில் விக்ரம் கதாநாயகனாக நடிக்கிறார். ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்கிறார். படத்தில் காஜல் அகர்வாலை கோயமுத்தூர் அம்மணியாக காட்டியிருக்கிறார்களாம். இந்த மாதிரி கதாபாத்திரத்தில் இவர் நடிப்பது இதுவே முதன் முறை. வில்லனாக மகேஷ் மஞ்சுரேகர் நடிக்கிறார். இவர் ஹிந்தியில் பிரபல இயக்குனர், நடிகர் என்பது குறிப்பிடத்தக்கது. வாஸ்தவ், ஆஸ்திவா, குருஷேத்ரா, நிடான், பிதா உட்பட 23 படங்கள் இயக்கி உள்ளார். அத்துடன் தபாங், காண்டே வாண்டட், ஸ்லம் டாக் மில்லியனர், ரெடி போன்ற படங்களில் நடித்து இருக்கிறார். ஏராளமான விருதுகளையும் பெற்றிருக்கிறார். முக்கிய கதாபாத்திரங்களில் நாசர், கருணாஸ் நடிக்கிறார்கள்.
கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் திரு. இவர் இயக்கும் 5 வது படம் இது. “ கருடா “ படத்தின் படப்பிடிப்பு ஏப்ரல் 1 ம் தேதி சென்னையில் துவங்குகிறது. ஸ்ரீபெரும்புதூர் அருகே 100 ஏக்கர் நிலத்தை வாடகைக்கு எடுத்து அதில் பிரமாண்டமான அரங்குகள் அமைக்கப் பட்டு படப்பிடிப்பு நடைபெற உள்ளது. சென்னையை அடுத்து பொள்ளாச்சி, கோவை, அகமதாபாத், லக்னோ, ஆகிய இடங்களிலும், பெரும்பகுதி படப்பிடிப்பு அரபு நாடுகளிலும் நடைபெற உள்ளது. பரபரப்பான ஆக்ஷன் படமாக “ கருடா “ உருவாகிறது.
இப்படத்திற்கு கிரிநந்த என்றொரு புதிய முகம் இசையமைக்கிறார். பொதுவாக பெரிய ஹீரோக்கள் தங்கள் படத்தின் டெக்னீஷியன்கள் விஷயத்தில் எளிதில் சமாதானம் ஆக மாட்டார்கள். விக்ரம் ஏ.ஆர்.ரஹ்மான் லெவலுக்கு ஆசைப்படாவிட்டாலும், இமான் லெவலுக்காவாவது பிரஷர் கொடுத்திருப்பார் அல்லவா? ஆனால் எப்படி கிரிநந்த் உள்ளே வந்தார் என்பதுதான் பெரும் குழப்பமாக இருக்கிறது. ஒருவேளை விக்ரம் திருந்தியிருக்கலாம்… யார் கண்டது?
Puthu mugathuku chance kudutha parattanum da nonaigala..athu enna vikram A.R Rahuman ku asaipdakudatha.. illa antha thaguthithan illaiya.. Ajith ku mattum eppavum jalra adikada…
வெள்ளம் பற்றிய விக்ரமின் குறும் படத்துக்கு பாட்டு போட்டாறே… அவருங்க. நன்றிய இப்படிக் காட்டுறாரு..