பஞ்சாயத்து! கடைசி நேரத்தில் ஓட்டமெடுத்த விஷால்!
‘நெடுநல்வாடை’ படத்தின் ஹீரோயின் அதிதி, இன்னும் அபாய கட்டத்தை தாண்டவில்லை. அதாவது அப்படத்தின் இயக்குனருக்கும் அவருக்கும் ஏற்பட்ட பிரச்சனையிலிருந்து விடுபடவில்லை. “நானிருக்கேன்… டோண்ட் வொர்ரி” என்று கூறி, பஞ்சாயத்துக்கு நாள் குறித்த விஷாலும், என்ன பிரஷ்ஷரோ? ஆளே வராமல் ஒதுங்கிக் கொள்ள, மறுபடியும் கரண்ட் கம்பியில் சிக்கிய காக்கா போலாகிவிட்டார் அதிதி.
குற்றம் நடந்தது என்ன?
‘நெடுநல்வாடை’ படத்தில் பத்து நாட்கள் நடித்துக் கொடுத்திருக்கிறார் அதிதி. அதற்காக வாங்கப்பட்ட சம்பளம், அவரது கொண்டைக்கு ஹேர் பின் வாங்கக் கூட போதாது என்பது தனிக்கதை. நள்ளிரவில் அறைக்குள் புகுந்து அடித்தது. ரோட்டில் போட்டு புரட்டியது. அசிங்கம் அசிங்கமாக திட்டியது என்று இயக்குனர் செல்வகணேஷ் மீது ஏகப்பட்ட குற்றச்சாட்டுகள் வைக்கிறார் அதிதி. அதற்கப்புறம் இவர் விஷமருந்தி உயிர் பிழைத்ததெல்லாம் ஊரறிந்த கதை.
இப்போது மீண்டும் தன் படத்தில் நடித்துத்தர சொல்கிறாராம் செல்வகணேஷ். முடியாது. ஆளை விடுங்கள் என்கிறார் அதிதி. பிரச்சனை இப்போது எல்லா சினிமா சங்கங்களிலும் நடந்து வர…. டைரக்டருக்கு ஆதரவாக அவரது சாதி பிரமுகர்கள் உள்ளே குதித்துவிட்டார்களாம். நடிகர் சங்கத்துக்கு எல்லாரையும் அழைத்த விஷால், குறிப்பிட்ட நேரத்தில் “எனக்கு வேற வேலை இருக்கு. எல்லாத்தையும் கருணாஸ் பேசுவார்” என்று அவரை கை காட்டிவிட்டு ஸ்பாட்டுக்கு வராமலே எஸ்கேப் ஆகிவிட்டார்!
டைரக்டரும் கருணாசும் சாதி ரீதியாக உறவுக்காரர்கள் என்பதால், பஞ்சாயத்தில் நேக்கு போக்கான தீர்ப்பே வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. விஷால் பேசுவாருன்னு நினைச்சேன். இப்படி பண்ணிட்டாரே என்று பேரதிச்சிக்கு ஆளாகியிருக்கிறார் அதிதி.
இதற்கிடையில் அதிதியை படப்பிடிப்பில் கற்பழித்துவிட்டதாக கேரளாவிலிருக்கும் மீடியாக்கள் ஊதிவிட, அதிதியின் தங்கைக்கு நடக்கவிருந்த திருமணம் நின்று, அவரும் தற்கொலைக்கு முயன்று வீடே படு சோகத்தில் இருக்கிறதாம்.
ஒரு படம்… ஒரு டைரக்டர்… ஒரு விவாதம்… ஒரு வேகம்… ஒரு ஆசை… ஒரு தவிப்பு… ஒரு முறைகெட்ட லவ்… சம்பந்தமேயில்லாமல் ஒரு குடும்பத்தை எப்படியெல்லாம் போட்டு உருட்டுகிறது?
#சினிமாடா…. #பெண் பாதுகாப்புடா…
பின்குறிப்பு- இவ்வளவு கொடூரமான நேரத்திலும் ஒரு மகிழ்ச்சியான செய்தி. அதிதி ஹீரோயினாக நடித்திருக்கும் ‘பட்டதாரி’ திரைப்படம் இந்த வாரம் 14 ந் தேதி திரைக்கு வருகிறது.
To listen audio click below:-