வீடு மாறி கதவைத் தட்டும் விஷால்
“ஆளுக்கொரு ஆம்புலன்ஸ் சொல்லுங்கப்பா…” என்கிற அளவுக்கு பீதி நிறைந்து காணப்படுகிறது சினிமா இன்டஸ்ட்ரி. உலகத்தின் ஏதோ ஒரு மூலையில் இருந்து கொண்டு திருட்டு இணையதளங்களில் புதுப்படங்களை ஒளிபரப்பி வந்த கும்பல், இப்போது இன்னும் சுலபமாக்கிவிட்டது தன் ஊழியத்தை. யெஸ்… இப்போது லைவ்வாக பேஸ்புக்கிலேயே படங்களை ஒளிபரப்ப ஆரம்பித்துவிட்டார்கள்.
‘ஓசியிலேயே மிளகு ரசம்… ஊற்றி ஊற்றிக் குடி’ என்று கொண்டாடிக் கொண்டிருக்கிறது கன்ஸ்யூமர்ஸ் மைண்ட்! இந்த நிலையில் ட்விட்டரிலும் படம் குறித்த நல்லது கெட்டதுகளை பரப்ப ஆரம்பித்துவிட்டார்களே என்று வேதனைப்பட ஆரம்பித்திருக்கிறது இன்டஸ்ட்ரி. அதுவும் கடந்த வாரம் விஷால் கிட்டதட்ட அழாத குறையாக தன் ஆத்திரத்தை இறக்கி வைத்தார். “விமர்சனம் பண்ணுங்க. தப்பில்லே. படம் வெளியான மறு நாள் பண்ணுங்க. அல்லது இரண்டு நாட்கள் கழிச்சு பண்ணுங்க. அதை விட்டுட்டு கையில இருக்கிற செல்போன் மூலம், படம் ஓடிகிட்டு இருக்கும் போதே ‘நல்லால்ல… மொக்கை‘ என்றெல்லாம் ட்விட்டரில் விமர்சனம் செய்வது எந்த விதத்தில் நியாயம்? இதை உடனே நிறுத்துங்க” என்றார்.
‘கத்தி சண்டை’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில்தான் அவர் இவ்வாறு கூறினார். நிஜத்தில் ட்விட்டரில் சினிமா செய்திகளை எழுதி வரும் சிலர்தான் இந்த வேலையை பார்த்து வருகிறார்கள். ஆனால் சம்பந்தப்பட்ட அந்த சிலரை அழைத்து முதல் நாளே ட்ரெய்லர்களையும், பர்ஸ்ட் லுக்கையும் காட்டி காட்டிப் பெருமைப்படும் விஷால் உள்ளிட்ட ஹீரோக்கள், இந்த வேண்டுகோளை நியாயமாக அவர்களிடம்தானே சொல்ல வேண்டும்?
அதை விட்டு விட்டு வீடு மாறி கதவை தட்டுகிறாரே விஷால்? இதை அறியாமை என்பதா? அறிந்தும் அறியாமை என்பதா? சொல்லுங்க சின்ன கேப்டன்!
To listen Audio click Below:-0
https://youtu.be/VVhVcCnm83s