ஜல்லிக்கட்டு விவகாரம்! தமிழரின் உரிமைக்காக பிரதமரை சந்திக்கிறார் விஷால்?
“நான் பீட்டாவில் மெம்பர் இல்லே இல்லே இல்லே” என்று பலமுறை அழுத்திச் சொல்லி வருகிறார் விஷால். “ஆனால் அது புரியாம எழுதுறாங்களே…” என்பதும் அவரது வேதனையாக இருக்கிறது. “நான் மைக்கை பிடிச்சு சொல்லாத வரைக்கும் அது நான் சொன்னதில்ல. ஆனால் ஏன் யூகத்தின் பேரில் எழுதுறாங்கன்னும் புரியல” என்று தன்னிலை அளித்து வரும் விஷால், அந்த விளக்கங்களை இன்னும் மக்கள் மத்தியில் கொண்டு செல்லவில்லை என்பதுதான் கேடு… சாபம்!
அவரது வீடியோ பேட்டிகள் அனைத்தும் ‘பிரைடே சினிமா’ என்றொரு யூ ட்யூப் அக்கவுன்ட்டில்தான் வெளியிடப்படுகிறது. நடிகர் சங்கத்தின் சார்பில் தனியாக ஒரு யு ட்யூப் அக்கவுண்ட் ஓப்பன் பண்ண வேண்டும் என்கிற அடிப்படை தெளிவு கூட விஷாலுக்கு இல்லையே என்கிற வருத்தத்திலும், வேறொரு அக்கவுன்டுக்கு நாம் ஏன் கூட்டம் சேர்க்க வேண்டும் என்கிற அலட்சியத்தின் காரணமாகவும் அந்த பேட்டிகளை ஒளிபரப்புவதேயில்லை முன்னணி இணையதளங்கள். இந்த ஒரு காரணத்தினாலேயே அவரது கருத்துக்கள் மக்களை சென்றடைவதும் இல்லை.
போகட்டும்… இப்போது நாம் சொல்ல வருவதே வேறு. ஜல்லிக்கட்டு விஷயத்தில் விஷாலை எதிரியாக நினைத்துக் கொண்டிருப்பவர்களை சமாளிக்கும் விதத்தில் ஒரு ஐடியா செய்திருக்கிறார் விஷால். ஜல்லிக்கட்டுக்கு தடையை நீக்கக் கோரி பிரதமரை நேரில் சந்தித்து முறையிடப் போகிறாராம். இதற்காக முன் அனுமதி கேட்டு அனுப்பியிருக்கிறார். அதற்கு முன்னால் விஷால் சார்பில் விளக்கமாக ஒரு கடிதமும் பிரதமர் மோடிக்கு அனுப்பப்பட்டுள்ளது.
அழைப்பு வருமா? விஷாலை போலவேதான் ஜனங்களும் வெயிட்டிங்!
https://youtu.be/_dngipwogKQ
ALL THE BEST
Nammura mathiriya irukku.
Welldone