எழுந்து வா… நீ இழந்தது போதும்! விஷால் அணியின் தேர்தல் பாட்டு!
கோடம்பாக்கத்தின் முக்கியமான ரேஸ் ஆரம்பம் ஆகிவிட்டது. அந்த ஓட்டம் மராத்தான் வேகத்தில் மெள்ள ஆரம்பித்தாலும் நேரம் செல்ல செல்ல எண்ணூறு மீட்டர் ஓட்டப் பந்தயம் போலாகிவிட்டது. இந்த முறை தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவர் பதவிக்கோ, அல்லது மற்ற பதவிகளுக்கோ போட்டியிட விரும்பாமல் ஒதுங்கிக் கொண்டார் கலைப்புலி தாணு. கடந்த பல வருடங்களாகவே போட்டியிட்டு வரும் பலர் அதே போலொரு முயற்சியில் இருக்க…. நம்ம அணி என்ற பெயரில் புதியவர்களுடன் கிளம்பிவிட்டார் விஷால்.
தேர்தல் ஜூரம் உச்சத்திலிருக்கிறது. வீடு வீடாக சென்று தயாரிப்பாளர்களை சந்தித்து வரும் அத்தனை அணியும், ஏகப்பட்ட வாக்குறுதிகளை அள்ளி வீசிக்கொண்டேயிருக்கிறது. பதினைஞ்சு வருஷமா இருந்தவங்களும் பல வருஷங்களாக சொல்லி வந்த அதே வாக்குறுதிகளை ரிப்பீட் பண்ணுவதால், “இவங்க எப்பவுமே இப்படிதான் பாஸ்… அந்த நேரத்துல ஜெயிச்சு வர்றதுக்காக அள்ளி விடுவாய்ங்க. அப்புறம்… அடுத்த எலக்ஷன் வரும்போது, போன வருஷம் மீந்து போன அதே நோட்டீசை தூக்கிக்கிட்டு வந்திருவாய்ங்க” என்று அலுத்த குரலை பதிவு செய்ய தவறவில்லை சில வாக்காளர்கள்.
விஷால் அணி பந்தாவாக காரில் போய் இறங்குவதை விட்டுவிட்டு டூவீலரில் வந்திறங்கி வாக்கு கேட்பதை சற்று வியப்போடுதான் பார்க்கிறது வாக்காளர் வட்டாரம். இந்த வியப்பை அப்படியே அறுவடை செய்வதற்காக தேர்தல் பாட்டு ஒன்றையும் கம்போஸ் பண்ணி கதி கலங்க விட்டிருக்கிறார் இந்த அணியின் செயற்குழு உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும் களவாணி புகழ் இசையமைப்பாளர் எஸ்.எஸ்.குமரன்!
“எழுந்து வா… நீ இழந்தது போதும்” என்ற பல்லவியோடு ஆரம்பிக்கும் இந்த பாடலை கே.ஆர்.தரண் எழுத அரவிந்த் ஸ்ரீநிவாசன் பாடியிருக்கிறார். கேட்டு இன்புற கீழேயுள்ள லிங்கை க்ளிக் பண்ணுங்க!
https://www.youtube.com/watch?v=-G2By4WK6EM&feature=youtu.be
ALL THE BEST TO VISHAAL AND HIS TEAM