அஜீத்தின் புதிய முடிவு? விஷ்ணுவர்த்தன் அதிர்ச்சி!

அஜீத்தின் அடுத்தப்பட அறிவிப்புக்கு அவரது ரசிகர்கள் மட்டுமல்ல, எதிர்க்கட்சி சோல்ஜர்களும் எக்கச்சக்க வெயிட்டிங்! இந்த நிலையில் வேதாளம் பட இயக்குனர் சிவா அடுத்த கதையை இன்னும் இன்னும் என்று மெருகேற்றிக் கொண்டிருக்கிறாராம். நடுவில் அவருக்கு ஒரு திட்டம் அல்லது யோசனை. அதை அஜீத்திடம் கேட்டு உறுதி செய்து கொண்டு மேற்கொண்டு டெவலப் செய்யலாம் என்று நினைத்தாராம். அதற்கு அஜீத் சொன்ன பதில்தான், பின்னாலேயே வெயிட்டிங்கில் இருக்கும் விஷ்ணுவர்த்தனை செமத்தியாக போட்டு தாக்கியிருக்கிறது. சிவா கேட்டதென்ன? அஜீத் சொன்னதென்ன?

தனது புதிய கதையில் ஒரு பாதி கதையில் அஜீத் நிகழ்கால தோற்றத்திலும், மீதி பாதி கதையில் வரலாற்று சம்பவங்களை உள்ளடக்கிய வீரனாகவும் காட்டலாம் என்று நினைத்திருக்கிறார். அதாவது ‘மஹதீரா’ என்றொரு படம் வந்ததல்லவா? கிட்டதட்ட அதைப்போல. இதை கேட்டு பலமாக யோசித்த அஜீத், “‘பாகுபலி’ படத்திற்கு பிறகு நாமும் அப்படியொரு படம் செய்தால், நிச்சயம் ஒரு ஒப்பீடு வரும். முழுமையாக அதை செய்யாவிட்டால், அதுவே தப்பாக முடியவும் வாய்ப்புண்டு. எனவே பாதி வரலாறு அம்சங்களுடன் கூடிய கதை என்பதே ரிஸ்க்தான்” என்று கூறிவிட்டாராம்.

இந்த விஷயம் அப்படியே விஷ்ணுவர்த்தன் காதுக்கு போகாமலிருக்குமா? மனுஷன் பயங்கர கன்பியூஸ் ஆகிவிட்டாராம். ஏன்? அவர்தான் அஜீத்தை வைத்து ராஜராஜ சோழன் கதையை எடுக்க திட்டமிட்டுள்ளாரே? ஒருவேளை அந்த கதையையும் அஜீத் மாற்றச் சொன்னால்?

எது எப்படியோ? கதை விஷயத்தில் பெருத்த அக்கறை காட்ட ஆரம்பித்திருக்கிறார் அஜீத். அதுவே அவரது ரசிகர்களுக்கு சந்தோஷம்தானே?

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
தெறியை தெறிக்க விடும் சுட்டீஸ்! ஒரு வித்தியாசமான ரிவ்யூ

https://www.youtube.com/watch?v=PUusdfgKPd4&feature=youtu.be

Close