100 கோடியில் சினிமா! 2020 ல் இவர்தான் சூப்பர் ஸ்டார்?

‘ஜட்டி எடுத்தாக்கூட அதை சரவணாவ்ல எடு… என்று மோட்டிவேட் பண்ணி கல்டிவேட் பண்ற கலை அவருக்குதான்யா வரும்! தாழ்வு மனப்பான்மையின் தாவாங்கட்டையில் ஒவ்வொரு நாளும் ஒங்கி குத்துவிடும் ஒரே தமிழன் அவர்தான்யா…’ என்று சந்தோஷத்தில் நெஞ்சடைக்கும் தமிழன் ஒரு முறையாவது அந்த லெஜன்ட் சரவணாவின் படிக்கட்டை மிதித்திருப்பான்.

கார்ப்பரேட்டுகளையே கதறவிட்ட அந்த தமிழன் அருள்! தமிழின் முன்னணி ஹீரோயின்களுடன் ஸ்டைல் ஸ்டெப் போட்டு, தன்னையும் ஸ்டோரையும் வளர்த்த அருளுக்கு இப்போது வந்திருக்கிற ஆசை தமிழ்சினிமாவையே புரட்டிப் போடுகிற ஆசை. ‘அவரு நினைச்சா செய்வாருய்யா…’ என்று இப்பவே கோஷங்கள் கிளம்பிவிட்டது. எப்படி?

அருளே ஹீரோவாகிவிட்டார். நாம கை வைக்காத ஒரே ஏரியா சினிமாதான் என்று நினைத்து இறங்கினாரா? அல்லது சமானிய முகத்தையும் சரித்திரத்தில் பொறிக்க ஆசைப்பட்டாரா? தெரியாது. ஆனால் அருள் நடிக்கும் படத்தின் பட்ஜெட் 100 கோடி! ‘இந்த படத்தில் அருளுக்கு ஜோடியாக நடிப்பதா?’ என்று தெறித்து ஓடுகிற ஹீரோயின்களில் முதலிடத்தில் நயன்தாராவும் அடுத்த இடத்தில் தமன்னாவும் இருக்கிறார்கள். ஆனால் அவர்களுக்கு தெரியாது… தமிழில் வெளிவரும் இந்தப்படம் வியாபார எல்லைகளை தகர்த்து ஒரு சரித்திரத்தையே படைக்கப் போகிற விஷயம்.

ஒரு சாதாரண வில்லேஜில் பிறக்கிற ஒருவன் எப்படி உலகத்தின் எல்லா மூலைகளுக்கும் போய் வந்தான் என்றும், அவன் செய்த சாகசங்களும்தான் கதையாம். பிரபல விளம்பர பட இயக்குனர்கள் ஜேடி-ஜெர்ரி இயக்குகிறார்கள். பொதுவாக டைரக்டர் ஷங்கர்தான் 100 கோடிக்கும் மேல் பட்ஜெட் போடுவார். ஆனால் அருள் நடிக்கும் படத்திற்கு இப்பவே 100 கோடி பட்ஜெட் போட்டுவிட்டார்கள். படம் முடியும் போது அது 150 கோடியை எட்டியிருக்கலாம்.

2020 ல் இப்படத்தை வெளியிட முடிவெடுத்திருக்கிறார்கள். அலை கடலென மக்களை திரட்டி ஆடித்தள்ளுபடி திருவிழாவை நடத்தி வந்த அருளின் இந்தப் படம் எந்த மாதத்தில் வெளிவருகிறதோ… அந்த மாதம் தள்ளுபடி மாதமாக இருக்கப் போவதில்லை. ‘தள்ளுங்கடி… தியேட்டருக்குள்ள போகணும்’ என்று சொல்லுகிற மாதமாக இருக்கும்!

தலைவா… ஈகர்லி வெயிட்டிங்!

Read previous post:
சைரா நரசிம்மா ரெட்டி | Sye Raa Narasimha Reddy

https://www.youtube.com/watch?v=gVRHXYeEvHs&t=1s

Close