அமலாபால் மீதுதான் தவறா? வடசென்னையும் விலகலும்!
அமலாபால் விலகியதை ஏதோ நயன்தாராவே விலகியதை போல மார்வலியோடு மாய்ந்து மாய்ந்து எழுதி வருகிற மீடியாக்களால், “ஓஹோ… நம்ம இன்னும் மேல் லெவலிலேயே இருக்கோம் போலிருக்கு” என்ற எண்ணம் தழைத்தோங்கி வருகிறதாம் அமலாபாலுக்கு! “பாருங்க… நான் விலகியதால் தமிழ் இன்டஸ்ட்ரியே புலம்பிகிட்டு இருக்கு” என்று பாஸ்கர் தி ராஸ்கல் படத்தின் தமிழ் ரீமேக் படப்பிடிப்பில் அவர் கவலைப்படுவதாக தகவல்.
இவரது ‘தன் வியப்பை’ கண்டு “ஹைய்யோ… ஹய்யோ நீங்களும் நம்பீட்டீங்க” என்று வடிவேலு போல முதுக்குக்கு பின்னால் நின்று சிரிக்கிறார்கள் படக்குழுவினர் என்பது வேறு விஷயம். நிஜத்தில், வடசென்னை படத்திலிருந்து அமலாபால் விலகினாரா, விலக்கப்பட்டாரா என்கிற கேள்வியை எழுப்பி கிறுகிறுக்க விடுகிறார்கள் வேலை வெட்டியில்லாத சிலர்.
சரி விசாரித்துதான் பார்ப்போமே… என்று மூக்கை நுழைத்தால், எல்லா பதில்களும் அமலாவுக்கு சாதகமாகவே வருவதுதான் ஆச்சர்யம். இந்தப்படத்தில் நடித்தே ஆக வேண்டும் என்று பெரிய முயற்சி செய்துதான் தனுஷை சம்மதிக்க வைத்தாராம் அமலா. நடுவில் இவர் படத்திலேயே இருக்கக் கூடாது என்று அமலாபாலுக்கு எதிராக பொங்கிய தனுஷ் பேமிலி, அந்த கோபத்தை அதற்கப்புறமும் அடக்க முடியாமல் இருந்தது தனிக்கதை.
பெரிய்ய்ய்ய்ய சம்பளம் பேசி பெரிய அட்வான்சையும் கொடுத்து அமலாபாலுடன் அக்ரிமென்ட் போடப்பட்டது. ஆனால் அவர் வடசென்னை படத்திற்கு கொடுத்திருந்த தேதிகள் எதையும் பயன்படுத்தவே இல்லையாம். படப்பிடிப்பு வெவ்வேறு காரணங்களால் தள்ளி தள்ளிப் போக, வடசென்னை படத்தை கைவிடுவதை தவிர வேறு வழியில்லை என்ற முடிவுக்கு வந்தாராம் அமலாபால்.
மம்மியின் வற்புறுத்தலுக்கு இணங்க அவர் வேறு படங்களில் சைன் பண்ணியதுதான் இதற்கெல்லாம் காரணம். சினிமாவில் மழை பெய்யும்போதே நனைந்து கொள்வதுதான் புத்திசாலித்தனம். வந்த மழையை விடுவானேன் என்று அமலாவும், அவரது மம்மியும் நினைத்ததில் தப்பென்ன இருக்கிறது?
https://www.youtube.com/watch?v=03SoObpVX6Q&feature=youtu.be