ஏன்தான் இப்படி செய்கிறாரோ விஜய் சேதுபதி?
செத்த வீட்டுக்குப் போனாலும் நான்தான் பொணமா இருக்கணும் என்றொரு வசனம், சினிமாவுலகத்தில் பிரபலம். எல்லாவற்றுக்கும் நானே நானே என்று முந்திரிக்கொட்டையாக முந்திக் கொள்ளும் ஹீரோக்கள், எடிட்டிங் டேபிளில் உட்கார்ந்து தன்னைவிட நன்றாக நடிக்கும் வில்லன் போர்ஷனை கூட வெட்டி எறிந்த கதையெல்லாம் இன்டஸ்ட்ரி அறிந்த்துதான்.
ஆனால் விஜய் சேதுபதி அப்படியா? கதை நன்றாக இருந்தால், அப்படத்தில் தானும் ஒரு துகளாக இருப்பதில் அநியாயத்துக்கு ஆர்வம் காட்டுகிறார். இமைக்கா நொடிகள் படத்தில் விஜய் சேதுபதிக்கு ஒதுக்கப்பட்டிருக்கும் டைம் எவ்வளவு என்பதை விடுங்கள். ஒரு பரபர ஹீரோ, பக்கா பயந்தாங்கொள்ளியாக நடித்தால் இமேஜ் என்னாவது? அப்படிதான் நடித்திருக்கிறாராம் இதில்.
நயன்தாராவின் கணவராக நடித்திருக்கும் விஜய் சேதுபதியை ஒரு கும்பல் கொலை செய்துவிடுகிறது. பயந்தாங்கொள்ளியான அவர் எதிர்த்துக் கூட தாக்காமல் செத்துப் போகிறார். கொலைக்கு காரணமானவனை கண்டு பிடிக்க கிளம்பும் நயன்தாரா, அவனை எப்படி எதிர்கொண்டார் என்பதுதான் முழுக்கதையும்.
விஜய் சேதுபதி ரோலில் யார் வேண்டுமானாலும் நடித்திருக்கலாம். ஆனால் பெட்ரேமாக்ஸ் லைட்டேதான் வேணும் என்று அப்படத்தின் இயக்குனர் அஜய் ஞானமுத்து அடம் பிடித்த்துதான் ஏனென்று தெரியவில்லை. அட… அவர்தான் கேட்கிறார். இந்த விஜய் சேதுபதிக்கு ஞானம் எங்கே போச்சு?
https://youtu.be/lPn4TYoRn8M