ஐயோ பழி போட்றாங்களே…! தமிழ் நடிகை கதறல்!

‘வந்தா மல’ ங்கற படத்தில் நடித்திருந்தாலும், போனா மண்ணாங்கட்டின்னு இருக்க முடியுதா? ஃபீலிங்…ஃபீலிங்…பீலிங்…! எல்லாம் அந்த ஒரு சினிமா பத்திரிகையால் வந்த கவலை!

ஸ்ரீ பிரியங்காவுக்கு இப்பவும் அறிமுகம் தேவைப்படதான் செய்யுது. வந்தா மல, கங்காரு, போன்ற படங்களில் நடித்திருந்தாலும் அவர் தற்போது நடித்து ரிலீசுக்கு தயாராக இருக்கும் ‘மிக மிக அவசரம்’ பிரியங்காவின் கேரியரில் பிக் பாஸ்தான். சந்தேகமில்லை. ஏனென்றால், ரிலீசுக்கு முன்பே தமிழின் முன்னணி இயக்குனர்களுக்கு திரையிடப்பட்ட இப்படம், என்னங்க… இப்படி அசத்திபுட்டாரு… என்று அப்படத்தின் இயக்குனர் சுரேஷ் காமாட்சியை கொண்டாட வைத்திருக்கிறது. அப்படத்தின் நாயகியான ஸ்ரீபிரியங்காவுக்கும் கூடை கூடையாக பாராட்டுகள்.

கடந்த மூன்று மாதங்களாக எங்கு திரும்பினாலும் கோடம்பாக்கத்தின் நம்பிக்கைக்குரிய படமாக பேசப்பட்டு வருவதும் மிக மிக அவசரம்தான்.

இந்த நேரத்தில் ஒரு அதிசய திருப்பம். சிம்புவே அழைத்து “என் படத்தை நீங்க தயாரிங்க” என்று கூறிவிட்டார் சுரேஷ் காமாட்சியை. ‘மாநாடு’ என்று தலைப்பிடப்பட்டிருக்கும் அப்படத்தை வெங்கட் பிரபு இயக்குகிறார். இதுவல்ல பிரச்சனை என்றாலும், இதுதான் பிரச்சனையோ என்று சந்தேகப்பட வைக்கிறது சம்பவங்கள். இந்தப்படத்தில் ஸ்ரீ பிரியங்காவையும் நடிக்க வைக்க அவர் ட்ரை பண்ணுவதாக ஒரு சினிமா பத்திரிகையில் செய்தி வந்தது. அது கூட பிரச்சனையில்லை. மேற்படி பிரியங்கா இவரது கட்டுப்பாட்டில் இருக்கிறார் என்று அடிஷனலாக கொளுத்திப் போடப்பட, அதிர்ந்தே போய்விட்டார் பிரியங்கா.

நான் யார் கட்டுப்பாட்டிலும் இல்லை. இல்லவே இல்லை. ஒரு தமிழ் பொண்ணு முட்டி மோதி முன்னுக்கு வந்தா, அது பொறுக்கலையா உங்களுக்கு? என்றும் கதறி வருகிறார்.

சுரேஷ் காமாட்சியிடம் பேசினோம். “நான் சிம்பு படம் தயாரிக்கறது கோடம்பாக்கத்தில் சிலருக்கு பிடிக்கல. இந்த கூட்டணியை எப்படியாவது கெடுத்துவிடணும் என்று ஸ்பெஷல் டைம் ஒதுக்கி வேலை பார்க்குற மாதிரி தெரியுது. அதில் ஒன்றுதான் இந்த களேபரம். நான் கல்லடி பட தயாரா இருக்கேன். ஏன் சம்பந்தமில்லாமல் ஒரு பொண்ணு வாழ்க்கையை கெடுக்கணும். அதுதான் வருத்தம்” என்றார்.

கங்காருன்னு படம் எடுத்தவருக்கு கவலையை தூக்கி மடியுல வைக்குதே மீடியா? அச்சச்சோ…!

Read previous post:
பிரபுதேவா புதுப்படம்! அந்த கம்பீர மீசை எங்கேங்க?

Close