சிவகார்த்திகேயன் லெவலுக்கு நானா? ஒரே ஸ்கூல் பையன் அலறல்!
சந்தானமும் சிவகார்த்திகேயனும் நன்றாக ட்ரெயினிங் எடுத்துக் கொண்ட ஸ்கூல் விஜய் டி.வி! அதற்கப்புறம் மேற்படி டி.வி யில் ஒரு இடம் கிடைச்சா போதும். நாமளும் சந்தானம், சிவகார்த்திகேயன்தான் என்று உள் நாக்கை உப்பு போட்டு வளர்த்துக் கொண்டு கிளம்பிவிட்டது ஒரு கூட்டம். இதில் ரோபோ சங்கர் மாதிரியான ஒரு சிலருக்கு மட்டும் ஆத்தா அருள் புரிகிறாள்… ம.கா.பா ஆனந்த் மாதிரியான ஒரு சிலர் இன்னும் துடுப்பு போட்டுக் கொண்டே இருக்கிறார்கள். பட்… கரைதான் கண்ணுக்கே புலப்படவில்லை.
இந்த நிலையில் ஒரு இளைஞரை பார்த்து, “ வாங்க சிவகார்த்திகேயன்…” என்று அழைத்தால் அலறாமல் என்ன பண்ணுவார்? அலறியேவிட்டார் கார்த்திக் ராஜ். விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘கனா காணும் காலங்கள்’, ‘ஆபிஸ்’ என்ற இரண்டு சீரியல்கள்தான். ஒட்டுமொத்த தமிழ்நாட்டின் கிச்சன்களிலும் இஞ்சி துவரம் பருப்புக்கு பதிலாக இவரையே போட்டு அரைக்கிற அளவுக்கு பேமஸ் ஆகிவிட்டார்.
விடுவார்களா? 465 என்ற படத்தில் ஹீரோவாக்கிவிட்டார்கள். த்ரில்லர் வகையை சேர்ந்த இப்படத்தை சாய் சத்யம் என்பவர் இயக்கியிருக்கிறார். இப்படத்தின் பிரஸ்மீட்டில்தான், நீங்க சிவகார்த்திகேயன் லெவலுக்கு வளரணும் என்று நிருபர்கள் வாழ்த்த படு பயங்கர ஷை ஆகிவிட்டார் கார்த்திக். சார்… அவரு எவ்ளோ பெரிய இடத்திலிருக்கிறார்? அவர் இடத்துக்கு நான் எப்படி சார் போக முடியும்? எனக்கு கொடுத்த வேலையை சிறப்பா செஞ்சிருக்கேன்னு நினைக்கிறேன். படம் நல்லா ஓடுனா சந்தோஷம். இல்லேன்னா, தொடர்ந்து முயற்சி பண்ண வேண்டியதுதான் என்றார் அடக்கமே உருவாக!
ஆமா… அதென்ன 465? இந்திய தண்டனை சட்டத்தின் ஒரு பிரிவாம். அதுதான் இந்த படத்தின் மெயின் லைன் என்றார் கார்த்திக். கூகுள்ல தேடுனா Section 465 Email spoofing இப்படி வருதேப்பா?
https://youtu.be/3ahKfZ1xGZA