நடு ரோட்டில் அடி உதை! இயக்குனர் செயலால் தற்கொலைக்கு முயன்ற ஹீரோயின்!
சினிமாவுக்கு வரும் இளம் பெண்கள் ‘ஐயோ பாவம்…’ என்கிற கட்சியில் தன்னை உறுப்பினராக சேர்த்துக் கொண்டிருக்கும் ஆயிரமாவது ஹீரோயின் அதிதி என்றால், “ஆமாங்க ஆமாம்..” என அழுத்தமாக ஆமோதிக்கும் கோடம்பாக்கம். கடந்த சில தினங்களுக்கு முன் தற்கொலைக்கு முயன்று காப்பாற்றப்பட்டிருக்கிறார் அதிதி. காரணம், அவர் நடிக்கும் ஒரு படத்தின் இயக்குனர்தான் என்கிறது ஊர் உலகம்.
பின்னணியில் நடந்தது என்ன? விசாரித்தால், காதில் விழுகிற தகவல்களில் அவ்வளவு நாராசம். நெடுநல்வாடை, பட்டதாரி ஆகிய இரு படங்களில் ஹீரோயினாக நடித்து வருகிறார் அதிதி. இவரை ஒரு தலையாக காதலித்து வருகிறாராம் இதில் ஒரு படத்தின் இயக்குனர். படப்பிடிப்பில் நடுநடுவே தன் காதலை வலியுறுத்தி வந்தவர், ஒரு கட்டத்தில் “என்னை காதலிச்சே ஆகணும்” என்று கட்டாயப்படுத்தியதுதான் கொடுமை. சமயங்களில் அதிதியை அறைக்குள் வைத்து பூட்டிவிட்டு, என் காதலை ஏற்றுக் கொண்டால்தான் அறைக்கதவை திறப்பேன் என்றெல்லாம் குடைச்சல் கொடுத்து வந்தாராம்.
எவ்வளவோ கஷ்டங்களை பொறுத்துக் கொண்ட அதிதி, பொறுக்கவே முடியாத ஒரு சந்தர்ப்பத்தில் மேற்படி இயக்குனரை செருப்பால் அடித்தாதாக கூறப்படுகிறது. அவ்வளவுதான். எப்படியோ தப்பித்து கேரளாவுக்கே ஓடிய அதிதிக்காக காத்திருந்தார் இயக்குனர். போன வாரம் ஒரு விளம்பர ஷுட்டிங்குக்காக சென்னைக்கு வந்த அதிதியை, தன் அடியாட்கள் சகிதம் வளைத்துப் பிடித்து காரிலிருந்து இறக்கி நடுரோட்டிலேயே வைத்து வெளுத்துவிட்டாராம் அவர். பொதுமக்களால் காப்பாற்றப்பட்ட அதிதி அருகிலிருக்கும் போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுத்திருக்கிறார்.
கையோடு கையாக முதல்வரின் தனிப்பிரிவிலும் எழுத்து பூர்வமாக புகார் அனுப்பிவிட்டாராம். என்ன காரணத்தாலோ, பிரச்சனையில் அவருக்கு தீர்வு ஏற்படாத நிலையில் விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றிருக்கிறார். அந்தத் தகவலை தனது பேஸ்புக்கிலும் வெளியிட்டிருக்கிறார்.
உடனே பரபரப்பான கோடம்பாக்கத்தின் அனைத்து சங்கங்களும், பேஸ்புக் பதிவை உடனே அகற்று என்று வற்புறுத்தியதுடன், மேற்படி தற்கொலை முயற்சியை மறைக்கும் நடவடிக்கைகளிலும் இறங்கிவிட்டன.
பத்திகிட்ட மனுஷனை காப்பாத்துறதுக்கு பதில், பத்த வச்ச தீப்பெட்டிக்கு பாதுகாப்பு கொடுப்பதே இயல்பா போச்சு எல்லாருக்கும்!
To listen audio click below :-