அஜீத்திற்கு சிக்கல் ஏற்படுத்திய ‘கருப்பு ஆடுகள்….’

பெரிய நடிகர்கள் படங்கள் வரும்போதெல்லாம் தண்டவாளத்தில் பாறாங்கல்லை உருட்டி விடுவதே சிலருக்கு வேலை. அஜீத்தின் ‘ஆரம்பம்’ வரும்போதும் அப்படியொரு பலமான பாறாங்கல்லை உருட்டி விட்டிருக்கிறார்கள் சிலர். வேடிக்கை என்னவென்றால் உருட்டிவிட்டவர்கள் வேறு யாருமல்ல, ‘ஆரம்பம்’ பட தயாரிப்பளார் ஏ.எம்.ரத்னமிடம் பணியாற்றிய முக்கியமான சிலர்தானாம்.

கடந்த சில வாரங்களாகவே கொந்தளித்துப் போய் கிடக்கிறது அஜீத் ரசிகர்கள் வட்டாரம். படம் திட்டமிட்டபடி தீபாவளிக்கு வராது என்று சிலர் கிளப்பிவிடும் புரளியை கேட்டு அலறிய அவர்கள், அஜீத்தின் வீட்டுக்கு கட்டுக்கட்டாக கடிதம் அனுப்பி விசாரிக்கிறார்களாம். போனிலும் விடாத் தொல்லையாம். இதனால் அவர் ஆபிஸ் மற்றும் வீட்டு போன்களில் ‘எரித்தோராமைசின்’ டேப்ளட்டை கரைத்து ஊற்றுகிற அளவுக்கு தொண்டை கரகரப்பு ஏற்பட்டிருப்பதாகவும் தகவல்.

இந்த திடீர் புரளிக்கு பின்னாலிருப்பது நாம் குறிப்பிட்ட அந்த சிலர்தானாம். எப்படி? ஏ.எம்.ரத்னமிடம் பணியாற்றி வந்த இவர்கள், சொல்லாமல் கொள்ளாமல் அவரிடமிருந்து விலகிவிட்டார்களாம். வந்த வேகத்தில் இவர்கள் செய்த பெரிய காரியம், எல்லா தியேட்டர்காரர்களுக்கும் போன் அடித்ததுதான். ஏ.எம்.ரத்னம் விநியோகஸ்தர்களுக்கும், திரையரங்க உரிமையாளர்களுக்கும் பழைய பட பாக்கிகள் வைத்திருக்கிறார். இதை செட்டில் செய்தாலொழிய படத்தை வெளியிட முடியாது. கடைசி நேரத்தில் எல்லாரும் இந்த படத்தை முற்றுகையிடுவார்கள். எனவே ஆரம்பம் படத்தை நம்பி வாங்காதீர்கள் என்பதுதான் அந்த அட்வைஸ்.

இதனால் அதிர்ச்சியடைந்த ஏ.எம்.ரத்னம், தயாரிப்பாளர் சங்கத்தில் மேற்படி நபர்கள் மீது புகார் கொடுத்திருக்கிறாராம். அடுத்தவர்களை வயிறெரிய வைத்து அதில் பசியாறுகிற சிலரை அஜீத் மாதிரி ஆக்ஷன் ஹீரோக்களே ஒன்றும் செய்ய முடியவில்லை என்றால், இந்த ‘வல்லிய’ சினிமாவை யார்தான் காப்பாற்றுவது?

Arrambam producer files complaint with Producers’ Council

Ajith’s Arrambam has been surrounded by rumours and false stories right from the day the film title was announced. Earlier for title rumours were floating. The rumours regarding non availability of theatres not even starting dying down after the announcement of theatres ready for release of the film, some vested interests have started spreading another rumour. Like Nagesh said in Thiruvilaiyaadal, there are two types of poets, one who really painstaking writes poems and the other whose job is nothing but to criticise each and anything. Likewise, there are people who are literally present in the society to spread falsehood and rumours. It is said some disgruntled elements who worked with Producer Manirathnam suddenly resigned their job and started their own business? What is the nature of business? Spread rumours about Manirathnam and his film. They have telephoned all the theatres and distributors that Manirathnam owes large amount to lot of people and those people have decided to file a stay in the court and so the film will have problem with the release, and so don’t by the film. Surely this must have been the handiwork of vested interest with the help of these disgruntled elements. If this is the case with a popular hero like Ajith, one cannot imagine where Tami Cinema is headed to?

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
கார்த்திகாவுக்கு கல்யாணம்… – அம்மா ராதா அதிரடி முடிவு

இதனால் சகலமானவர்களுக்கும் தெரிவிக்கப்படுவது என்னவென்றால், ‘ஐ ப்ரோ’ கண்ணழகி கார்த்திகா விரைவில் கல்யாணம் கட்டிக் கொள்ளப் போகிறார்... போகிறார்... போகிறார்... ‘போகட்டும்... யாருக்கென்ன நஷ்டம்?’ என்று இந்த...

Close