அஜீத்திற்கு ஜோடியாகிறார் எமி ஜாக்சன்

கவுதம்- அஜீத் இணையும் படம் எப்போது துவங்கும் என்கிற ஆசை உலகம் முழுவதுமிருக்கிற அஜீத் ரசிகர்களின் மனசில் ஆறாக பெருகி ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த நல்ல செய்தியை சொல்வதற்கு நாள் குறிப்பதற்கு முன், படத்தின் நாயகிகளை முடிவு செய்ய வேண்டிய கட்டாயத்திலிருக்கிறார் கவுதம். இந்த விஷயத்தில்தான் இழுபறியாம். ஏன்?

கடந்த பல மாதங்களாகவே கவுதமுக்கு ஒரு கரிசனம் வந்திருக்கிறது த்ரிஷா மீது. விண்ணை தாண்டி வருவாயா சென்ட்டிமென்ட்டாக இருக்கலாம். தனது அடுத்த படத்தில் த்ரிஷாவும் வேண்டும் என்று நினைக்கிறார் அவர். சூர்யாவுடன் அவர் சேரவிருந்த படத்திற்கே த்ரிஷாவை ஜோடியாக்கலாம் என்று நினைத்திருந்தார். அவரது ஆசையில் சூர்யா போட்டது ஒரு கூடை மண் அல்ல, ரெண்டு கூடை. அதில் ஒரு கூடை த்ரிஷாவுக்குமானது.

தற்போது அஜீத் நடிக்கவிருக்கும் படத்திற்கும் த்ரிஷாவை சிபாரிசு செய்தாராம் அவர். கதைப்படி படத்திற்கு இரண்டு ஹீரோயின்கள். அதில் ஒருவராக அனுஷ்கா தேர்ந்தெடுக்கப்பட்டுவிட்டார். அந்த மற்றொரு ஹீரோயினுக்குதான் இவரை சிபாரிசு செய்தாராம் கவுதம். ஆனால் அஜீத்தின் எண்ணமோ வேறாக இருக்கிறதாம். த்ரிஷாவுடன் இணைந்த ஜி என்ற படமும் சரி, கிரீடம் படமும் சரி. தனது மார்க்கெட்டில் பள்ளம்தான் பறித்தது. ரொம்பவே ஸ்டடியாகவும் வேகமாகவும் ஓடிக் கொண்டிருக்கும் இந்த மார்க்கெட் குதிரையின் மீது மறுபடியும் த்ரிஷாவை ஏற்றி குதிரையே குப்புற விழுந்துவிட்டால்? இந்த ஒரே காரணத்திற்காக த்ரிஷாவை மறுத்த அஜீத் தரப்பு, ‘எமியிடம் பேசுங்க’ என்கிறார்களாம்.

மதராசப்பட்டினம், ஐ என்று தமிழ் படவுலகில் தளதள தங்க பொம்மையாக மின்னி வரும் எமிக்கு இந்த அழைப்பு கசக்கவா போகிறது?

Amy Jackson is likely to romance Ajith?

Ajith’s next film with director Gautham Menon is always in the news for whatsoever be the reason. The director Gautham Menon is taking all pains to see that the film is liked by all as his earlier films. He had recommended Trish to Ajith for playing the lead in the film, but seems to have been rejected by the actor. While Gautham has recommended Trisha for sentimental reasons, with his VTV fim, Ajith too has rejected the actress for the same sentimental reason for the loss suffered by his films Ji and Kireedam.

Now we hear that Amy Jackson is being approached to play the lead in the film on the advice from the actor. Incidentally Ajith’s will have two heroines in the film, and Anushka is already roped in to play the lead. With Ajith as his co-star would not Amy grab the opportunity?

2 Comments
  1. ramsaran says

    Good super

  2. jeevz says

    Then what about Mangatha? You guys forgot that?

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
‘குக்கூ ’ உருவாக காரணமே ஷங்கர் சார்தான்! ராஜுமுருகன் பிளாஷ்பேக்…

‘குக்கூ’ படம் விருதுகளை ‘கு(வி)க்கூ’ம் படமாக இருக்குமா என்றெல்லாம் தமிழ் கூறும் நல்லுலகம் ஆர்வத்தோடு காத்திருக்க, ‘பொட்டி நிரம்புச்சா’ என்று கலெக்ஷன் மீதே கண் வைத்திருக்கிறார்கள் விநியோகஸ்தர்கள்....

Close