அஜீத்தை வம்புக்கு இழுக்கும் நடிகைகள்…?

‘இந்த கேள்வியை அஜீத்திடம் கேட்க முடியுமா உங்களால்?’ இப்படியொரு பூகம்ப பெருமூச்சை கோடம்பாக்கமே பொசுங்கிப் போகிற அளவுக்கு வீசிக் கொண்டிருக்கிறார்கள் சில முக்கியமான நடிகைகள். அஜீத்தையே வம்புக்கு இழுக்கிற அளவுக்கு தைரியம் வந்துருச்சா என்று பொத்தாம் பொதுவாக இந்த நடிகைகள் மீது கவலைப்படும் சிலர், ஏன் இந்த தைரியம்? அது எப்படி வந்தது? என்பதை பற்றியெல்லாம் தெரிந்து கொள்வது ரொம்ப ரொம்ப அவசியம்.

கடந்த ஒரு வாரமாகவே பற்றிக் கொண்டு எரிகிறது கோடம்பாக்கம். எந்த போலீஸ் ஸ்டேஷனுக்கும் ஒரு புது இன்ஸ்பெக்டர் வந்தால், அந்த ஏரியாவை ஒரு வாரத்திற்காவது ஆட்டி வைப்பார். அப்படிதான் புது போலீஸ் ஸ்டேஷன் ஆகியிருக்கிறது தயாரிப்பாளர் சங்கம். ‘ஃபங்ஷனுக்கு வராதவங்களை லிஸ்ட் எடுங்க. சம்பளத்தை புடிங்க’ என்றெல்லாம் இவர்கள் கொடுக்கிற அலம்பலை தொடர்ந்துதான் இந்த பெருமூச்சு.

பொதுவாகவே சில நடிகைகளை தவிர, பல நடிகைகள் அவரவர் நடித்த படங்களின் ஆடியோ வெளியீட்டு விழாவுக்கோ, பட பிரமோஷன்களுக்கோ வருவதில்லை. இந்த நேரத்தில் லகானை கையில் எடுத்திருக்கிற தயாரிப்பாளர் சங்கத்தின் துணிச்சலுக்கு முதல் மரியாதை செலுத்தியே ஆக வேண்டும். ஆனால் நடிகர் சங்க பொதுக்குழுவுக்கு கூட வராத இவர்கள் எப்படி இதுபோன்ற கட்டாயங்களுக்கு செவி சாய்ப்பார்கள்? முதலில் இந்த சவுக்கை நடிகர் சங்கம் அல்லவா எடுத்திருக்க வேண்டும் என்ற கூக்குரலும் கேட்கிறது இங்கே.

‘அஜீத், தான் நடிக்கும் பட பிரமோஷன்களுக்கும் வருவதில்லை. பாடல் வெளியீட்டு விழாக்களுக்கும் வருவதில்லை. அவரை கேட்கிற தைரியம் இவர்களுக்கு இருக்கிறதா?’ என்று மூன்றெழுத்து நடிகை ஒருவர் ஈசிஆரில் நின்று கொண்டு அலறுவது யார் காதிலாவது விழுந்ததா தெரியவில்லை. பட்… தங்களின் டயலாக்கை கூட பிறரை பேச வைத்து பர்பாமென்ஸ் கொடுக்கும் நடிகைகள், இந்த முறையும் தங்கள் குமுறலை அவரவர் மேனேஜர்கள் மூலம் ஒலிக்கிறார்கள்.

‘எங்க மேடம் கூட இது பற்றி புலம்புனாங்க’ என்று சந்தடி சாக்கில் ஓதிவிட்டு போகிறார்கள் மேனேஜர்கள். இருந்தாலும் அஜீத் பற்றி இவர்கள் கேட்ட கேள்விக்கு தயாரிப்பாளர் சங்கம் என்ன பதில் வைத்திருக்கிறதோ? அதுதான் இப்போது எழுந்திருக்கும் பெரிய கேள்வி.

Kollywood actresses drag Ajith’s name to save their skin?

Managers of some of the actresses in Kollywood have become – His Masters’ Voice. No, this is not a casual remark. They have indeed become one. Recently an actress voiced her anger against the Producers’ Council, questioning them, if they have the courage to ask Ajith as to why he is not attending the audio release or film promotional activities, of his films. Her concern was the council is discriminative in taking actions against those actresses who are not attending such functions. Her remarks were followed up by few managers of actresses, who have also said to have echoed the same sentiments. Their stand is absolutely right. But some key figures of Kollywood have sought to question these actresses. They ask how come these girls have the courage to question an actor of Ajith’s calibre and who has given them the courage. Their argument is simple. You can pinpoint a mistake or an error by others only when you are perfect. None of the actresses have even attended the General Body Meet of Nadigar Sangam. Carrying all the dirt on the shoulders, one cannot say the other person is dirt. But with all these drama happening, what answer does the Council give, is the big question doing rounds in Kollywood.

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
பண்ணைபுரத்தில் தவறவிட்டேன்… சென்னைபுரத்தில் அடைந்துவிட்டேன்… -ஆனந்த யாழை மீட்டுகிறேன் 04 -தேனி கண்ணன்

இந்த வாரத்தை ஒரு சின்ன ஃப்ளாஷ் பேக்கோடு ஆரம்பிக்கலாம்.. நான் ஐந்தாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்த நேரம் அது. இப்பலாம் எம்புள்ளய அடிச்சிட்டாரு, உன் புள்ளய அடிச்சிட்டாருனு வாத்தியார்...

Close