அஜீத் அப்படிப்பட்டவரா? சொல்லாத நன்றியும், குழப்பும் செய்தியும்
குபேரன் கொல்லைக்கதவை தட்டினாலும் சரி, தெருக்கதவை தட்டினாலும் சரி, கேஷ் பாக்ஸ் கர்ப்பிணியாகப் போவுதுன்னு அர்த்தம். குபேரனுக்குதான் அந்த மரியாதை என்றில்லை. அஜீத்தின் கால்ஷீட் கிடைத்தாலும் போதும். அதற்கு இணையான விஷயங்கள் நடக்கும் இங்கே. அப்படி சமீபகலாமாக அஜீத்தின் குட்புக்கில் இடம் பிடிக்க அல்லாடிக் கொண்டிருக்கிறார்கள் தயாரிப்பாளர்கள். இந்த நேரத்தில்தான் அஜீத்தை வைத்து படம் எடுத்த சமீபத்திய தயாரிப்பாளர் ஒருவர், அவரோட கால்ஷீட் இனிமே கிடைச்சா கூட எனக்கு வேணாம் என்று கூறிக் கொண்டிருக்கிறாராம்.
இதென்ன அதிர்ச்சி? வர்ற சீதேவியை வேணாம்னு சொல்வாங்களா யாராச்சும்? இப்படியெல்லாம் குழப்பத்தோடு இந்த விஷயத்தை ஆராய ஆரம்பித்தால் யார் பக்கம் தப்பு என்றே புரியவில்லை. பாரம்பரியமான தயாரிப்பாளர் அவர். இவரது அப்பா அந்த காலத்தில் பெரிய நடிகர்களை வைத்து படம் தயாரித்திருக்கிறார். தெலுங்கிலும் இவரது கொடிதான் ஒரு காலத்தில் உயர பறந்திருக்கிறது. ஆனால் மகனுக்கு ஏனோ சினிமாவில் பெரிய மெனக்கெடல் இல்லை. ஏன்?
இந்த நடிகனுங்க பின்னாடி போய் தொங்கிகிட்டு நிக்கறதுக்கு பதிலா, சொந்த வேலையை பார்த்துகிட்டு, இருக்கிற சொத்துக்களை பராமரிச்சுகிட்டு இருந்தா போதும் என்கிற மனநிலைதான். அப்படியிருந்தும் நடிகர் ஸ்ரீகாந்த் நடிக்கும் ஒரு படத்தை தயாரித்தார். அந்த படத்தின் இயக்குனர் ஒரு உப்புமா படத்தை எடுத்துக் கொடுத்ததால், சினிமாவின் மீது இருந்த கொஞ்ச நஞ்ச ஆசையையும் விட்டு ஒழித்துவிட்டார். அதற்கப்புறம் பல மாதங்கள் கழித்து விஷால் கால்ஷீட் கிடைக்க, சரி போனால் போகட்டும். வந்தால் வரட்டும் என்று ஒரு படத்தை எடுத்தார். படம் வளர்ந்து கொண்டிருக்கும் போதே விஷாலுக்கும் டைரக்டருக்கும் ஈகோ பிரச்சனை எழ, அந்த படத்தையே தனது நிறுவனத்திற்காக வாங்கி மீதி படத்தை முடித்தார் விஷால்.
அதற்கப்புறமும் சினிமாவை பற்றி எந்த அக்கறையும் இல்லாமலிருந்தவரை, எப்படியோ ‘அஜீத் கால்ஷீட் தர்றாரு. படம் பண்றீங்களா’ என்று உள்ளே இழுத்தார்கள். நல்லவேளை… இந்த படம் சொன்னபடி முடிந்தது. ஊரெங்கும் பாராட்டுகள்.
‘நல்ல கம்பெனி. சொன்னபடி பணத்தை கொடுத்துட்டாரு. படப்பிடிப்பிலும் எவ்வித டார்ச்சரும் இல்லை. மறுபடியும் அவர் விரும்பினா கால்ஷீட் தரலாம்’ என்று அஜீத் தனது குட்புக்கில் அவரை வைத்தாராம். ஆனால் தயாரிப்பாளர் தரப்பு என்ன சொல்கிறது தெரியுமா?
‘அந்த படம் முடிஞ்சதுக்கு பிறகு ஒரு நாள் கூட அந்த பையன் போன் பண்ணி எனக்கு ஒரு தேங்ஸ் சொல்லல. இப்படியும் மெக்கானிக்கலா ஒரு ஹீரோ இருப்பாரா? வேணாம்ப்பா அவரோட சகவாசம். இனிமே கோடி கோடியா வந்து கொட்னாலும், அது அவர் தர்ற கால்ஷீட்டாலதான் வருதுன்னா, அது வேணவே வேணாம்’ என்கிறாராம் அந்த தயாரிப்பாளர்.
ஒரே வேடிக்கையாதான் இருக்கு எல்லாம்…
Ajith producer does not want to produce with Ajith again!
Ajith who has given back to back hit films recently, is the hot cake in Kollywood with so many producers are ready to pour in their money for Ajith’s call sheet. However to our surprise we hear that the producer who recently produced Ajith film is annoyed and disappointed. The producer though has everything good about Ajith, is disappointed because Ajith has not thanked the producer for having given the opportunity, say K-town sources. While it is true that Ajith’s humility and gratitude is well known in the trade circle and in the media, the comment of the producer has surprised many.