அஜீத் ஆபிசிலிருந்தே போன்… அன்புடன் திரண்ட சினிமா தோழர்கள்… ஆனால், போன இடத்துல?

கருப்பட்டியோ, கட்டி வெல்லமோ? ஏதாவது ஒரு இனிப்பு இல்லேன்னா, வாழ்க்கையே கசப்புதான் என்கிற ஃபார்முலாவை வைத்துக் கொண்டு எல்லா வகை ஹீரோக்களையும் வைத்து படம் இயக்கிக் கொண்டிருக்கிறார் வெங்கட்பிரபு. அவரது நெடுநாளைய சிரிப்பில் கொடுமை கொழுந்துவிட்டு எரிய ஆரம்பித்தது பிரியாணியில்தான். இந்த படம் தாமதம் என்பதில் மட்டுமல்ல, இன்னபிற விஷயங்களுக்காகவும் அவர் நொந்து நுடுல்ஸ் ஆகிக் கொண்டிருப்பது தனிக்கதை.

நடுவில் முற்றிலும் புது முகங்கள் நடிக்க ஒரு படத்தை இயக்கவிடலாமா என்று அவர் நினைத்துக் கொண்டிருக்கும் போதுதான் வலிய வந்த ஸ்ரீதேவி, வைர மோதிரத்தை மாட்டிவிட்டு போயிருக்கிறாள். அந்த ஸ்ரீதேவி அஜீத். அஜீத் அஜீத்!

கடந்த வாரத்தில் அஜீத் ஆபிசிலிருந்தே முன்னணி பின்னணி ஹீரோக்களுக்கு ஒரு போன் போனது. ஈசிஆர் ரோட்ல பார்ட்டி தர்றாரு. அவசியம் வந்துடணும். இதுதான் அழைப்பின் சாரம்சம். போனவர்களுக்கு இன்ப அதிர்ச்சி இன்னொன்று. இந்த பார்ட்டியை வெங்கட்பிரபுவுக்காக வழங்கியவர் அஜீத. அவரது பிறந்தநாளை முன்னிட்டு இந்த பார்ட்டியை ஏற்பாடு செய்திருந்தாராம் அவர்.

வாசலில் நின்று அனைவரையும் வரவேற்றவர் ஷாலினி. உள்ளே வந்திருந்த விருந்தினர்களை தடபுடலாக கவனித்தவர் அஜீத். பார்ட்டி முடியும்போது, எனக்காக ஒரு நல்ல கதையை ரெடி பண்ணிட்டு வாங்க. கால்ஷீட் ரெடி என்றாராம். அஜீத். அதுக்கு இடையில் நான் ஒரு சின்ன பட்ஜெட் படம் பண்ணிடுறேன். அதுவும் முற்றிலும் புதுமுகங்களை வச்சு என்ற வெங்கட்பிரபு சொல்ல, அந்த சின்ன பட்ஜெட் படத்துல எனக்கொரு கெஸ்ட் ரோல் கொடுங்க. நடிச்சுக் கொடுக்கிறேன் என்றாராம் அஜீத்.

கண்ணில் கண்ணீரே முட்டிக் கொண்டு வந்துவிட்டதாம் வெங்கட்பிரபுவுக்கு. ரொம்பவே சீரியஸ் ஆக இந்த கெஸ்ட் ரோலுக்கு மெனக்கட ஆரம்பித்துவிட்டார் அவர். தேடி வந்த ஸ்ரீதேவிக்கு மூட் இருக்கும்போதே முன்னேறிடுங்க வெங்கட்!

Venkat Prabhu gets ‘Mangatha’ Power!

Venkat Prabhu had a pleasant experience despite a melancholy situation he was in. We all know his film Briyani with Karthi is delayed and he was also check-mated by Briyani producer, not to accept any other film till Venkat completes another film after Briyani, for Studio Green Gnanavel Raja. But Venkat Prabhu’s birthday bash removed all the negatives and Venkat is confidence personified now! The change happened at the birthday bash. Well, it was Ajith who threw a grand birthday bash in honour of Venkat Prabhu. Both Ajith and Shalini were perfect hosts during the gala party. If this has given a remarkable recovery from his melancholy status, the words from Ajith was the real rejuvenator. Ajith has told him to make a story ready for him soon to begin the shoot. When Venkat said he is planning a small budget film with new faces, Ajith asked him to provide a guest role in the film. What a game is ‘Mangatha’! It has lifted the spirits of Venkat Prabhu soaring to a new high that he now seems to have the overwhelming power.

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
ஹன்சிகாவை தொடர்ந்து தமன்னா… சிவகார்த்திகேயனின் ‘மடக்கல்’ மர்மம்!

ஏன்ங்க... சிவகார்த்திகேயனுடன் ஜோடி சேர்ந்தா என்ன தப்பு? இன்றிருக்கும் பெரிய நடிகர்கள் யாருக்கும் சளைத்தவரில்லை சிவா. அவரது படத்தின் கலெக்ஷன் தெரியுமா உங்களுக்கு? என்றெல்லாம் வெளிப்படையாக பேட்டியளிக்கிற...

Close