அஜீத் படத்தில் சிம்பு! இது அவரே தந்த பரிசு

சிம்புவுக்கு யோக காலம் ஸ்டார்ட் ஆகிவிட்டது. எல்லாம் சந்தானத்தின் அட்வைஸ்தானாம். ஏன் நண்பா இப்படியிருக்கீங்க? அவனவன் வருஷத்துக்கு நாலஞ்சு படம் பண்ணி பணத்தையும் வெற்றியையும் அள்ளிகிட்டு இருக்கான். எல்லாருக்கும் டஃப் கொடுக்க வேண்டிய நீங்க அமைதியா இருக்கலாமா பாஸ் ? என்றெல்லாம் அட்வைஸ் செய்ய, டாப் லெவல் இயக்குனர்களுக்கு வலை வீச தயாராகிவிட்டார் சிம்பு. அவரது வியத்தகு மாற்றம் கண்டு ‘கிளம்பிட்டாருய்யா கிளம்பிட்டாரு…’ என்று தலைசுற்றிப் போயிருக்கிறார்கள் கோடம்பாக்கத்தில் பல இயக்குனர்கள்.

இதற்கிடையில் இன்னொரு சர்க்கரை செய்தி, சிம்புவின் ரசிகர்களுக்கு (அப்படியொரு கூட்டம் இருக்குதா?) சமீபத்தில் அஜீத்தை சந்தித்தாராம் கவுதம்மேனன். ஆரம்பம் படத்தில் ஆர்யா என்னோட நடிச்சது மாதிரி, வீரம் படத்தில் விதார்த் என்னோட நடிச்ச மாதிரி, இந்த படத்தில் சிம்புவுக்கும் ஒரு வெயிட்டான ரோல் கொடுங்க என்றாராம் அஜீத். அதோடு விட்டாரா? போனை சிம்புவுக்கு போடுங்க என்று கூறி, கவுதம் போனிலிருந்தே சிம்புவுக்கு பேச, புல்லரித்துப் போயிருக்கிறார் சிம்பு.

பல வருஷங்களாகவே அஜீத் ரசிகராக தன்னை காட்டிக் கொண்ட சிம்புவுக்கு இப்போதுதான் சிறப்பு பரிசு கொடுத்திருக்கிறார் அஜீத். அதை உருப்படியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டியது சிம்புவின் பொறுப்பு. பார்க்கலாம்…. லாட்டரி விழுதா, இல்ல சீட்டே கிழியுதான்னு?

Ajith recommends Simbu for a role in Gautham Menon’s film

It is now official that Gautham Menon would be directing Ajith from Feb.2015, in a slick and stylish action entertainer. But what is really a big news is that Ajith has recommended Simbu for a meaty role in his film, to Gautham Menon. Ajith has personally spoken to Gautham about this. He does not stop with it. He called up Simbu from Gautham’s mobile and told him about his joining him in his film. Elated Simbu is on cloud nine now. Simbu is already big fan of Ajith and he will be doing a role with Ajith would be taking him to the next level in Kollywood. However it is upto Simbu to make perfect use of this opportunity and bring in many more laurels.

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
அம்மாவோட வராதே… செல்போனை யூஸ் பண்ணாதே… ஹன்சிகாவை அடக்கியாளும் ஹீரோ!

ஐதராபாத்ல செம குளிர்ப்பா... சீக்கிரம் சென்னையில ஷுட்டிங் வச்சா நல்லாயிருக்கும் என்று ட்விட்டரில் ஹன்சிகா நடுங்கிக் கொண்டிருக்கிறார். அவரை மேலும் நடுங்க வைத்திருக்கிறது அந்த ஊர் படப்பிடிப்பு...

Close