அனுஷ்கா ஆர்யா ‘அதையும் தாண்டிய ’ ஆடிட்டர் சேவை!

மடி நிறைய அன்பு, மனம் நிறைய ரொமான்ஸ் என்று ஆர்யாவின் வாழ்க்கையே அலாதியானது. ‘அவருக்கு மட்டும் எப்ட்றா…?’ என்று சக நடிகர்களே போபால் விஷ வாய்வை கசிந்தாலும், ஆர்யாவின் ட்யூஷன் சென்ட்டரில் எப்போதும் யுவதிகள் கூட்டம்தான். நயன்தாரா, அனுஷ்கா, இவர்களுக்கு முன்னால் சுமார் ஒரு டசன் பூஜாக்கள் என்று எல்லாருடைய இஷ்டபூர்த்தி நடிகராக விளங்கிக் கொண்டிருக்கும் ஆர்யாவின் ரொமான்ஸ் ரகசியம் என்ன?

இன்பத்திலும் துன்பத்திலும் ஸோல்டர் கொடுப்பதுதான். அண்மையில் ஆர்யாவின் ஸ்பெஷல் பார்வையால் அதிக கருணைக்கு ஆளாகியிருக்கிறார் அனுஷ்கா. எப்படியாம்?

சென்னை, ஐதராபாத் என்று இரு பெரும் நகரங்களில் சொத்துக்களாக வாங்கிக் குவித்துக் கொண்டிருக்கிறார் அனுஷ்கா. இதற்கு முறையான ஆடிட்டர் இருந்தும், எதுவும் முறையில்லாமல் போகிறதோ என்கிற அச்சம் வந்ததாம் அவருக்கு. தன்னுடைய ஆடிட்டரை மாற்றிவிட்டு வேறொருவரை நியமிக்க அவர் முடிவெடுத்த போதுதான் ஆர்யாவின் அட்வைஸ் தேவைப்பட்டது அவருக்கு. ஏன்… அங்க இங்க அலையணும்? என்னோட ஆடிட்டரைதான் நயன்தாராவுக்கும் சொன்னேன். இப்போ உனக்கும் சொல்றேன் என்றாராம்.

ஒரு சுபயோக சுப தினத்தில் கணக்கு வழக்குகள் புதியவரிடம் ஒப்படைக்கப்பட்டதாம். இப்போது அனுஷ்கா பரம திருப்தி. ஆர்யா அவரை விட திருப்தி.

இடுக்கண் வரும்போது கடுக்கணையும் பிடுங்குகிற நட்புகளுக்கு மத்தியில் இந்த நட்புல மட்டும் அளவான உப்பு. அற்புதமான டேஸ்ட்!

Arya – a friend indeed gesture!

Arya is known for his friendship, be it boyfriends or girl friends, though his list of girl friends is on the rise always. Arya knows how friendship works. Timely help without expecting anything in return!

Recently Anushka Shetty who paired with Arya in Irandam Ulagam had some problems associated with her auditors. She was on the lookout for a good auditor to replace her current one. She contacted Arya, who immediately told her, “I had earlier recommended my auditor to Nayanthara; you can too take his services as your auditor”. Accordingly she appointed Arya’s auditor as her auditor, and now she seems to very satisfied.

It is this type of timely help that bonds his friends well with him. While we are not surprised, we of course, salute his attitude.

1 Comment
  1. ponravindran says

    nice

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
இந்துக்களும் முஸ்லீம்களும் சேர்ந்து வணங்கும் ஷிர்டி சாய்பாபா

இந்து-இஸ்லாம் என இரு மதத்திற்கும் பாலமாய்த் தோன்றிய இம்மகான் வசித்தது ஒரு மசூதியில். கொண்டாடியது ராம நவமி உட்பட பல இந்துப் பண்டிகைகளை. ’சந்தனக் கூடு’ என்று...

Close