ஆடாத ஆட்டமெல்லாம் போட்டவங்க…?

‘வந்த வேலையை ஒழுங்கா செய்யலேன்னா, சொந்த வேலையை பார்த்துட்டு போ’ என்று விரட்டிவிடுகிற மனப்பக்குவம் தமிழ்சினிமாவில் ஒருவருக்கும் இல்லை. இந்த மைனஸ்தான் ஆடாத ஆட்டம் போடும் பலரையும் வாழ வைத்துக் கொண்டிருக்கிறது. அந்த லிஸ்ட்டில் முதலிடத்தில் வைக்கப்பட வேண்டியவர் பிரகாஷ்ராஜ். கொடுத்த தேதிகளில் படப்பிடிப்புக்கு வர மாட்டார். வந்தாலும் அவர் கேமிரா முன்பு வந்து நின்றால் அதுவே பெரிய வரம். எப்படியோ இந்த பஞ்சரான வண்டியை பல வருஷங்களாக உருட்டிக் கொண்டிருக்கிறார்கள் இங்கே.

சமீபத்தில் இவரிடம் சிக்கி சின்னாபின்னப்பட்டுக் கொண்டிருக்கிறது ‘பூலோகம்’ என்கிற திரைப்படம். ஒரு வழியாக இந்த படத்தில் நடித்து முடித்துவிட்டார் அவர். எல்லாரும் டப்பிங் பேசியாகிவிட்டது. இவரும் பேசி முடித்துவிட்டால் அடுத்த கட்டத்திற்கு போய்விடலாம். ஆனால் மனுஷன் வந்தால்தானே? கெஞ்சி கூத்தாடிய டைரக்டரிடம், ‘செகன்ட் சன்டே ஃப்ரியா இருக்கேன். டப்பிங் பேசிடலாம்’ என்றாராம். அன்றைய தினம் ஸ்டுடியோவுக்கு டபுள் ரேட். இருந்தாலும் ஐதராபாத்திலிருந்து சென்னைக்கு வர பிளைட் டிக்கெட் போட்டு விட்டு காத்திருந்தார்கள். வந்தாரா?

மண்ணாங்கட்டி… அவரது மேனேஜர்தான் பேசினாராம்.

‘சார் அங்கேயே இருந்துட்டாரு. மூட் இல்லையாம். பேசாம எல்லாத்தையும் எடுத்துகிட்டு அங்க வரச்சொல்றாரு’ என்றாராம். அப்புறமென்ன? எல்லாத்தையும் எடுத்துக் கொண்டு அங்கு ஓடினார்கள். ஹ்ம்ம்… இவங்கள நம்பிதான் இருக்கு சினிமா.

Prakasha Raj plays ‘hide and seek’ game with Boologam makers?

Actor-Producer-Director Prakash Raj is no doubt a versatile personality donned different caps with success. However the actor has the habit of making the people to wait and wait and wait…… which is certainly not a good attitude. It is not the actor alone in Kollywood, but there are others too. Instead of making them to respect others emotions, Kollywood has learnt to live with such people.

Recently makers of Boologam starring Jayam Ravi and Trisha in the lead have completed dubbing of all artistes except Prakash Raj. He seems to have given several dates but failed to honour his words. Recently he told the makers that he would be available on 2nd Sunday when he would complete the dubbing. But to their dismay on the 2nd Sunday, his manager called them up and requested them to go to Hyderabad for dubbing. The makers have now gone to Hyderabad to finish the job on hand, however.

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
மரணத்தை எதிர்நோக்கியுள்ள துப்புரவு தொழிலாளியை முத்தமிட்டு வழியனுப்பிய ஒட்டகச் சிவிங்கி

புற்று நோயின் பாதிப்பால் மரணத்தை எதிர்நோக்கி காத்திருக்கும் வன விலங்கு காப்பகத்தின் துப்புரவு தொழிலாளியை அவருடன் பழகிய ஒட்டகச் சிவிங்கி முத்தமிட்டு வழியனுப்பிய காட்சி இணையதளத்தில் கண்டவர்களின்...

Close