‘ ஆடியோ விழாவுக்கு வரமாட்டேன் ’ கோபப்பட்ட காமெடி நடிகர்

சினிமா எடுப்பதே சிலம்பாட்டம் போல ஆபத்தான கலையாக இருக்கிறது. இங்கே என்னை மதிக்கல, உன்னை மதிக்கல… என்று பேச ஆரம்பித்தால் அவர்களை எங்கே கொண்டு போய் தள்ளுவது? கருப்பசாமி குத்தகைதாரர், வெடிகுண்டு முருகேசன் ஆகிய படங்களை இயக்கிய கோவிந்த மூர்த்தி, தற்போது இயக்கிக் கொண்டிருக்கும் படம் பப்பாளி. இந்த படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில்தான், இவரை ஜுஸ் ஆக்கியிருக்கிறார் அந்த நடிகர்.

பாடல் வெளியீட்டு தினமான இன்று காலை அவருக்கு ஒரு போன் வந்ததாம். எடுத்த எடுப்பிலேயே கோவிந்த மூர்த்தியிடம் கோபித்த மூர்த்தியானார் அந்த நடிகர். ‘ஏன்ப்பா என் படத்தை போஸ்டர்ல போடல? நான் இந்த விழாவுக்கு வரல… போ’ என்றாராம் ஆத்திரத்தோடு. ‘நல்லதா போச்சு. நீங்க வந்துதான் இங்க ஒண்ணும் ஆகணும்னு இல்லே. படத்தில் முக்கியமான ரோலில் நடிச்சிருக்கும் சரண்யா பொன் வண்ணன் படத்தையே கூட நான் போஸ்டர்ல போடல. படத்தின் ஹீரோ ஹீரோயின் படத்தை போட்டாதான் அது வியாபாரத்துக்கு யூஸ் ஆகும். உங்க படத்தை போட்டு என்னாகப் போவுது என்று இவரும் கடித்து வைக்க, அத்தோடு போன் டொக்!

ரேடியோ மிர்ச்சி செந்தில் ஹீரேவாக நடிக்கும் இப்படத்தில் அவருக்கு மாமியாராக நடிக்கிறாராம் சரண்யா பொன்வண்ணன். ‘பொதுவா எனக்கு எல்லா டைரக்டர்களும் ஹீரோவுக்கு அம்மா கேரக்டர் கொடுப்பாங்க. இதில் எனக்கு மாமியார் வேஷம். இருந்தாலும், மருமகனுக்கு சப்போர்ட் பண்ணுற மாமியார் கேரக்டர். படத்துல அவர் எனக்கு பிள்ளையா நடிக்காவிட்டாலும் பிள்ளை மாதிரிதான்’ என்று பாசம் பொழிந்தார் சரண்யா.

சாதாரணமாகவே நகைச்சுவையாக பேசுகிற வழக்கமுள்ள கோவிந்த மூர்த்தி, இந்த படத்தில் நடித்த அத்தனை பேரிடமும் அதே போலதான் பழகினாராம். அப்படியிருந்தும் அந்த காமெடி நடிகருக்கும் இவருக்கும் புட்டுகிச்சு. ஆமாம்… யாரந்த ஆவேச பார்ட்டி?

காமெடி நடிகர் சிங்கம் புலிதான். (ஹுக்கும்…)

Pappali Audio launched

The audio release of Pappali, starring Radio Mirchi Senthil and Ishara in the lead was held today. The film is directed by Govindamurthy who earlier directed Karuppusamy Kuthagaikarar and Vedigundu Murugesan. The cast and crew of the film were present during the occasion.

Saranya Ponvannan who is donning the role of mother in law in the film has said that normally she would be playing mother’s role to heroes. But in this film the director has given her mother in law’s character who supports his son-in-law.

Every good event will have some sourness; only then one can know the real taste of good. Pappali too had that effect today. In the morning itself the director Govindamurthy received a phone call from the comedy actor Singam Puli, who acted in the film, agitating his photo was not included the posters or banners for the audio launch. Despite the director convincing him that it is only customary to include the hero and heroine in the banners and posters, and pacified the actor, the comedian did not turn up for the event.

1 Comment
  1. Ghazali says

    சிங்கம் புலியா? நெனைச்சேன். அவர் ஏற்கெனவே என்னிடம் நடிக்கவும், வசனத்தை சரிபார்க்கவும் அக்ரீமென்ட்டில் கையெழுத்து போட்டுவிட்டு ஒரு பெரிய தொகையை அட்வான்சாக பெற்றார். பின்பு, அவர் இஷ்டத்துக்கு கதையை மாற்றினார். நான் கதையை மாற்றக்கூடாது என்று சொல்லவும், தன்னால் எனது சாய்ந்தாடு சாய்ந்தாடு படத்தில் பங்கேற்க முடியாது என்று சொல்லி விட்டார். அப்போ நான் கொடுத்த அட்வான்ஸ்?
    என்ன சின்னப்புள்ளதனமா இருக்கு? இந்த மாதிரி ஆளிடம் கொடுத்த காசை திரும்ப வாங்க முடியுமா? அந்தப் பணத்துக்கு கோவிந்தமூர்த்தியும் சாட்சி!
    கூடிய சீக்கிரம் சிங்கம்புலி மேல கேசு போடப்போகிறேன்.

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
கமல் அடித்தது காப்பியே அல்ல… இது மீடியாவின் கொடூர தாக்குதல்!

கடந்த ஒரு வாரமாக மீடியாவின் கொடூர தாக்குதலுக்கு ஆளாகியிருக்கிறார் கமல். அவரது ‘உத்தம வில்லன்’ கெட்டப் குறித்துதான் இந்த தாக்குதலை நடத்தி வருகிறது மீடியா. கமல் அடித்தது...

Close