ஆந்திரா மெஸ்சில் ஒரு கோங்குரா சட்னி
ஒரு படத்தின் தலைப்புதான் அட… என்பதற்கும், அட போங்கப்பா… என்பதற்குமான உத்வேகத்தை கொடுக்கிறது. அந்த வகையில் ‘ஆந்திரா மெஸ்’ என்கிற தலைப்பு எந்த ரகம் என்பதை வாசகர்களே அறிவார்கள். விளம்பரத்திலிருந்து டீஸர் வரைக்கும் எல்லா டச்சுகளுமே, ‘நாங்க வேற மாதிரி ஆளுங்க தெரியும்ல?’ ரகமாகவே இருந்தது. படத்தின் இயக்குனர் ஜெய்யும் மற்றவர்களும் மைக்கை பிடித்தவுடன் சொன்ன விஷயங்களும் சற்றே புதுசாக இருக்க, கோடம்பாக்கத்தை திரும்பி பார்க்க வைக்கிற வித்தை தெரிந்த ஆட்களாகவே தெரிந்தார்கள் அத்தனை பேரும். முக்கியமாக அவர்கள் சொன்னதில் நமக்கு பிடித்தது இதுதான். இந்த படத்தில் ஹீரோயினே இல்லையாம்.
ஸ்நுக்கர் விளையாட்டில் நாம் ஒரு பந்தை தட்டினால் அது இன்னொரு பந்தை தட்டி அது வேறொரு பந்தை தட்டி கடைசியில் சம்பந்தமேயில்லாத இன்னொரு பந்து போய் தொட்டியில் விழுமல்லவா? இந்த படத்தில் வரும் கேரக்டர்களும் அப்படி ஒன்றையொன்று தட்டி தட்டி செல்லும்படி வித்தியாசமாக திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கிறது என்றார் ஜெய். இவர் ஒரு விளம்பர பட இயக்குனராம். இப்படியே எத்தனை நாளைக்கு விளம்பம் எடுக்கறது? பேசாம ஒரு படத்தை தயாரித்து டைரக்ட் பண்ணுவோம் என்று புதிய முயற்சியில் இறங்கிவிட்டார்.
வரும்போதே தெளிவு என்று இதைதான் சொல்ல வேண்டும். இந்த படத்தை நீ ரிலீஸ் பண்ணு. நீ வாங்கிக்கோயேன்… என்றெல்லாம் கெஞ்சப் போவதில்லையாம் இவர்கள். உலகம் முழுக்க வோன் ரிலீஸ் என்கிற தைரியத்தோடு ஸ்டார்ட்… கேமிரா… ஆக்ஷன் சொல்ல ஆரம்பித்திருக்கிறார்கள். மாற்று சினிமாவுக்கெல்லாம் இப்படியொரு மன தைரியம் இருந்தால் கோடம்பாக்கம் உருப்படும்.
பார்க்கலாம்… ஆந்திரா மெஸ் சாப்பாட்டுல உப்பு மொளகா ருசி எந்தளவுக்கு இருக்கு என்று?
பின்குறிப்பு- நடிகர் கமல்ஹாசனை விதவிதமாக வரைந்து பெயர் வாங்கிய ஓவியர் ஸ்ரீதர் இதில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். ஷுட்டிங்கின்போது ஒன்மோர் ஒன்மோர்னு சொல்லியே என்னை தளர வச்சுட்டாங்க. அதுக்கெல்லாம் அஞ்சுற ஆள் நானில்லை என்றார். அப்ப முழு நேர ஆக்டர் ஆகிவிடுவாரோ?
Andhra Mess will be a different film says director Jai
The moment one says Andhra Mess, it automatically leads us to think of a very spicy food. Though it is made with same ingredients commonly used, the flavour would be very different. Likewise, the teaser, the trailer screened during the press meet of the film, showcased the difference to the pleasant surprise of audience.
Director Vijay, an experienced ad film maker, is getting graduated to feature film maker now with Andhra Mess. Speaking on the occasion he said that the story of the film is like that of snooker balls, with each character in the film gets disturbed by another character, so on and so forth. He has also revealed that there is no heroine in the film.
With so much of self-confidence the director and other members of the team have decided to release the film across the globe on their own without falling into the prey of distribution network.
Artist Sridhar, who had earlier drawn Kamal with his pencil drawings, is playing an important role in the film. He said that without losing his patience he has acted in the film to the complete satisfaction of the director.
We hope that the film will be different as has been publicised by its team and our best wishes for success.