“ஆபிஸ்லேயே இருங்க வர்றேன்!” – அஜீத்தின் வரவால் ஆடிப்போன தயாரிப்பாளர்…

 

 

‘ஆண்டவா… பிரசாதத்தை வாளியோடு கொடுத்திட்டீயேப்பா’ என்று திக்குமுக்காடி போயிருக்கிறார் ஏ.எம்.ரத்னம். பின்வரும் தகவலை கேட்கிற கடன்கார சீமான்கள், ஏ.எம்.ரத்னத்திடம் ‘கொடுக்கிறப்ப கொடுங்க சார். முதல்ல ஆரம்பத்தை ரிலீஸ் பண்ணுங்க’ என்று ஜகா வாங்கினாலும் ஆச்சர்யமில்லை.

என்ன நடந்தது?

‘வீரம்’ படத்திற்காக ஐதராபாத்திற்கு கிளம்பினாரல்லவா அஜீத்? கிளம்புவதற்கு முன்பாக ரத்னத்திற்கு போன் செய்து, ‘நான் உங்க ஆபிசுக்குதான் வந்துகிட்டு இருக்கேன்’ என்றாராம். சார் அப்பப்ப வந்துட்டு போறவர்தானே, இப்ப மட்டும் எதுக்கு இந்த அறிவிப்பு என்று வழிமேல் விழி வைத்து காத்திருந்தார் ரத்னம். காரை விட்டு அஜீத் ஒருவராக மட்டும் இறங்கவில்லை. அவருடன் கவுதம் மேனனும் இறங்கினாராம். அப்பவே புரிஞ்சு போச்சு ஏ.எம்.ரத்னத்திற்கு.

பேச்சு வார்த்தையை நேரடியாக ஆரம்பித்த அஜீத், ‘‘வீரம்’ படம் முடிஞ்சவுடன் உங்க கம்பெனிக்குதான் படம் பண்ணப் போறேன். டைரக்டர் கவுதம்மேனன்’ என்று கூற, ‘கண்ணா… ரெண்டு லட்டு திங்க ஆசை’யாவாகிப் போனார் ஏ.எம்.ரத்னம். கூரையை பிய்ச்சுக்கிட்டு குபேரனே கெஸ்ட்டா வந்தா அவருதான் என்ன செய்வார்?

ஆஹா… ஓஹோ… ஆஹாஹா….

Ajith bestows Arrambam producer with ‘Double Dhamaka’

There is an adage saying ‘Nothing succeeds like success’. Ajith who has given a rebirth to Sri Surya Movies producer AM Rathnam, in stablising his financial mess, through ‘Arrambam’, has given yet another opportunity for the producer to produce his next film, too. Already there is a huge buzz surrounding Arambam to make the film a phenomenon. With Ajith asking him to produce his next film too, is a ‘double dhamaka’ or to say in industrial language ‘100% bonus’ for Diwali. On a fine sunny morning Rathnam received a call from Ajith to wait for him at his office. Ajith arrived at Rathnam’s office, with a guest. Yes, you guessed it right. It was Gautham Vasudev Menon. Hitting the nail straight on its head, Ajith told Rathnam pointedly that ‘you are producing my next film. Gautham Menon is the director’. When money and success comes it will pour. Rathnam can now be a relived man from his creditors who will now be subdued on hearing the news. Rathnam can enjoy this Diwali with a mega ‘Arrambam’, for sure.

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
காளி போய் கபாலி வந்தாச்சு… டும் டும் டும்!

ஊருக்கெல்லாம் காளின்னு அறிவிச்சாங்களே ஒழிய, முதல் நாள் ஷுட்டிங்ல ஒரு இடத்துலயாவது காளின்னு எழுதணுமே, ம்ஹூம். கார்த்தியும், அட்டக்கத்தி ரஞசித்தும் இணைகிற புதிய படத்திற்கு காளி என்று...

Close